ஓர் அழகான எழுத்து முயற்சி.

தெருக்கூத்து

3 comments
இருட்டுக் கொட்டடியில்
சிற்றிடை சிரிப்பழகியின்
கடைசரக்கை கண்டிட,
விட்டில் பூச்சிகளாய்
வாலிபம் மொய்த்து நிற்க,
ஆரம்பித்தது கலைக்கூத்து.

அடித்தொண்டை கானமும்
கோமாளி பேச்சுமாய் தன்
நாடகத்தை தொடங்கினாள்.
காட்டியும் காட்டாமலும்
பேசியும் பேசாமலும்
ஜாடையாய் அவள் செய்த
கோலங்கள் இரவைவிரட்டிக்
கொண்டு இருந்தன.

ஏழ்மையின் காரணமாய்
தன் மானத்தை முச்சந்தியில்
கொட்டி அவள்  அள்ளி
கொண்டிருந்ததை பதின்ம
வயது சிங்கங்கள்
சீண்டி சுகம் கண்டனர்.

இங்கே பார்பவனுக்கும் பசி
பார்க்கப்படும் பொருளுக்கும் பசி
இவனது காமப்பசி அங்கே
அவளுக்கு வயற்றுப்பசியை
தீர்க்கிறது.

உண்மையில் பசி
சந்தி சிரிக்க வைக்கும்
கலைக்கூத்து தான்.






3 comments :


  1. இது தெரிந்துதான் அந்தக் காலத்திய தெருக்கூத்துகளில் ஆண்கள் பெண் வேஷம் போட்டார்களோ என்னவோ. பாரம்பர்யக் கலைகள் காமக் கலைகளாக மாறி விட்டது வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete
  2. இங்கே பார்பவனுக்கும் பசி
    பார்க்கப்படும் பொருளுக்கும் பசி
    இவனது காமப்பசி அங்கே
    அவளுக்கு வயற்றுப்பசியை
    தீர்க்கிறது.

    உண்மையில் பசி
    சந்தி சிரிக்க வைக்கும்
    கலைக்கூத்து தான்.

    அருமையான வரிகள் நண்பரே.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..