ஓர் அழகான எழுத்து முயற்சி.

யாரோ யார் யாரோ ?

22 comments
யாரோ யார் யாரோ
யாரோ யார் யாரோ
யாரோ யார் யாரோ ?
இந்த வாழ்க்கையின் வழித்துணை
யாரோ யார் யாரோ ?

வார்த்தையில் கனவுகள்
வடிக்கும் வேலையில்
தடைகள் சொன்னது
யார் யாரோ ?

சோதனை வாசலை
அடைத்த வேலையில்
கதவை திறந்தது
யார் யாரோ ?

துடிக்கும் இதயங்கள்
துவண்டிட்ட வேலையில்
ஆறுதல் தந்தவர்
யார் யாரோ ?

கண்ணீர் துடைக்க
கவிதை தந்து
கவலை துடைப்பவர்
யார் யாரோ ?

இரவின் நிலவில்
குளிரைத் துடைத்து
வெப்பம் தருபவர்
யார் யாரோ ?

கூரையில்லா வீட்டினுள்ளே
தொலைந்த ஜீவன்களை
கரை சேர்த்தவர்
யார் யாரோ ?

 யாரோ யார் யாரோ ?
காகிதம் கொடுத்து கவிதையாய்
வந்து போவார் யாரோ?

22 comments :

 1. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 2. நம்பிக்கையோடு இருங்கள் வழி கிடைக்கும்

  ReplyDelete
 3. //வார்த்தையில் கனவுகள்
  வடிக்கும் வேலையில்
  தடைகள் சொன்னது
  யார் யாரோ ?//அருமை அருமை ரசித்தேன் வரிகளை

  ReplyDelete
 4. Replies
  1. ங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. நண்பா..
  அடுத்தவர் கண்ணீரை நீ துடைக்க
  மற்ற யாரோவின் கை உனக்கெதற்கு?

  ReplyDelete
 6. அருமையான கவிதை நண்பரே! உங்கள் ஆதங்கம் கேட்கப்படும். நாங்களும் கவிதை தருகிறோம். பகிர்ந்து கொள்ள. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 7. படம் அருமை! படமே ஒரு கவிதை!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 8. தமிழ்மணம் வாக்குப்பட்டையை இன்னும் சரிசெய்யவில்லையா? ஓட்டுப்போட முடியவில்லையே நண்பரே! நண்பர் அப்துல் பாசித் அவர்களின் bloggernanban.com தளத்தில் அருமையான வழி சொல்லப்பட்டுள்ளது. அதன்படி செய்யுங்கள். நன்றி சகோ.

  ReplyDelete
 9. துடைத்திடும் கைகள் வைத்திடும்
  காலம் வந்திடும் நண்பரே..
  கலக்கம் வேண்டாம்
  தயக்கம் வேண்டாம்
  விடிந்திடுமுன்
  விடியலை உங்கள் கண்முன்
  படைத்திடும் விழிகள்
  வந்திடும்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 10. கண்ணீர் துடைக்க உம் கையே போதுமே மற்றவர் உதவி எதற்கு??? இது இருக்கட்டும் சிறந்த கவி ரசித்தேன்.............

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 11. வழியும் கண்ணீரை துடைக்க யார் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 12. யாரையும் எதற்கும் நம்ப வேண்டாம். தன் கையே தனக்குதவி. நல்லதோர் கவிதையில் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

   தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 13. ம்ம் கண்ணு அழப்படாது..நான் இருக்கேன்ல!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 14. கண்ணீர் மனதைப் பலஹீனப்படுத்தும் என்பார்கள்.அழுதால் மனப்பாரம் குறைகிறது.ஆனால் முயற்சியைக் குறைக்காமலிருந்தால் வெற்றிதான் தம்பி !

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..