ஓர் அழகான எழுத்து முயற்சி.

தனிமை கடற்பயணம்

2 comments
 lonely sea travel
அவன் கொடுத்த திசைமானியை
தொலைத்து விட்டேன்
காற்றடிக்கும் திசைகளிளெல்லாம் என்
பாய்மரம் நகர்ந்து கொண்டிறிக்கிறது
lonely sea travel
lonely sea travel
அலைகளின் அசைவுகளுக்கிடையே
மெல்ல மெல்ல என் வாழ்க்கை
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அகல் விளக்கின் துணைகூட இல்லாமல்
இரவில் தவிக்கிறேன்
பகலில் காய்கிறேன்
சுற்றி நீரிருந்தும்
நீர் வற்றி தவிக்கிறேன்
இந்த நீல வானமும்
நீலக்கடலும் என்னை
நிலைகுலையச் செய்கின்றன
அழகெல்லாம் பயமுறுத்தும்
பேய்களென தெரிகின்றன
என் பாடலே எனக்கு
மரண ஓலமாய் கேட்கிறது

என்னுளிருந்த கலைஞன்
முழுவதுமாக கருகிவிட்டான்
கலைதாகத்தோடு பயணம் மேற்கொண்டேன்
கரை என்னை ஏமாற்றிவிட்டது
உன்னை அழகென காட்டிவிட்டது
நீயோ சத்தமில்லாமல்
பலரைக் கொன்று
உன்காலடியில் புதைத்து
கரையில் உள்ளவர்களிடம்
அமைதியென புன்னகைக்கிறாய்
என்னை விட்டுவிடு
என் கவிதைப்பயணத்தை
இறுதிப்பயணம் ஆக்கிவிடாதே

2 comments :

  1. என்ன நண்பரே .. சில இடங்களில் கவிதையின் வாயிலாக யாரையோ சாடுவது போல் தெரிகிறது ..
    ஒண்ணுமே விளங்கவில்லை . தெளிவு படுத்துங்க

    ReplyDelete
    Replies
    1. யாரையும் சாடவில்லை நண்பரே!!இது ஒரு கலைஞனின் கடற்பயணம்.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..