சிலர் வாழ்க்கையை தங்ககளுக்காக தங்கள் எண்ணப்படி வாழ்கிறார்கள்.
சிலர் மற்றவர்களுக்காக வாழ்கிறார்கள்.
சிலர் எந்த தேர்வும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறார்கள்.இதில் எதில் சரி? எது தவறு? என்ற பேச்சிக்கே இடமில்லை.ஆனால் எல்லோருடைய வாழ்வும் இன்பம்.துன்பம் என்ற மேடு , பள்ளங்களின் வழியே தான் பயணிக்கிறது.இன்பத்தில் ஊறி மூழ்கியவர்களும் உண்டு.துன்பத்தை தாண்டி உச்சத்தை தொட்டவர்களும் உண்டு.இன்பத்தையும் துன்பத்தையும் எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்து தான் வாழ்க்கையின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
வாழ்க்கையை மேம்போக்காக, ஆர்ப்பாட்டமாக, கொக்கரித்து வாழும் போது தடமில்லாமல் அழிந்து போகிறோம்.ஆனால் புரிந்து கொண்டு வாழும் போது உணர்வு பூர்வமாக வாழ்கிறோம்.கடல் ஆர்பரித்து காணப்பட்டாலும் அதன் அடி ஆழத்தில் ஓர் அமைதியான நன்னீரேட்டம் இருக்கும்.அது போல வாழ்க்கை மேம்போக்காக, ஆர்ப்பாட்டமாக, கொக்கரித்து காணப்பட்டாலும் ,அதன் ஆழத்தில் ஓர் அமைதியான ஆன்மா இருக்கிறது.வாழ்க்கையின் ஆழத்திற்கு செல்ல செல்ல நாம் அதன் ஆன்மாகவே ஆகிவிடுகிறோம்.
வாழ்க்கையின் ஆழத்திற்கு செல்ல மூன்று உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இவை கண்டிப்பாக நம் வாழ்க்கையை மாற்றிப் போடும்.
முதல் உண்மை :நாம் என்றோ ஒரு நாள் இறக்கப் போகிறோம்.
சிந்தித்து பார்த்தால் நம் சாவை தவிர நமக்கு வலி கொடுக்க போகும் விசயம் வேறு எதுவும் இல்லை.நம் சாவின் முன்னால் வாழ்க்கையின் பிரச்சனைகள் ஒன்றும் இல்லை.நம் சாவை தவிர நம்மை தடை செய்கிற சக்தி வேறு எதுவுமில்லை.நாம் எல்லையில்லா சக்தியும்,எல்லையில்லா சுதந்திரமும் பெற்றவர்கள்.நாம் சாவை தவிர வேறு எதற்கும் பயப்பட தேவையில்லை.நமக்கும் சாவுக்கும் இடையேயான ஒப்பந்தம் தான் வாழ்க்கை.வாழ்க்கையை சரியாக, நேர்மையாக வாழும் போது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறது.
இரண்டாவது உண்மை:நாம் இறந்தபின் நம்மை எல்லோரும் மறக்கப் போகிறார்கள்
நமக்கு தெரிந்து இறந்து போனவர்கள், எத்தனை பேரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.எல்லோரையும் மறந்துவிட்டோம்.நாம் இறந்த பின்பு நம்மையும் இந்த உலகம் மறந்துவிடும் என்பது தான் உண்மை.அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் மண்ணிற்குள் போன மூன்று நாள் தான்.அதனால் வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.அன்பாக வாழுங்கள்.மற்றவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.அதே நேரத்தில் அடிமையாக வாழாதீர்கள்.வாழ்க்கை ஒரு முறைதான் அதில் யாருக்கும் சுமையாக இருக்காதீர்கள்.மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.தனியாக வந்தோம்,தனியாகவே போக போகிறோம் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
மூன்றாவது உண்மை: சாவதற்கு முன் ஏதாவது செய்யுங்கள்
நாம் எல்லோரும் ஏதாவது காரணத்திற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்.அதை அறிய முயற்சி செய்யுங்கள்.நாம் எல்லோருமே தனித்துவமானவர்கள்.நாமும் இந்த உலகத்தின் ஒரு பகுதிதான்.நம் பங்களிப்பில்லாமல் இல்லாமல் இந்த உலகம் முழுமை பெறாது.அதனால் இறப்பதற்கு முன் இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யுங்கள்.உங்கள் உதவியை எதிர்பார்த்து இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது.குறைந்த பட்சம் துவண்ட மனதிற்கு ஆறுதல் கொடுங்கள்.சாய்ந்து கொள்ள உங்கள் தோல் கொடுங்கள்.இது போதும் உங்கள் அன்பால் உலகை துடைக்க.மறந்து விடாதீர்கள்.நீங்கள்
தனித்துவமானவர்கள்.சாவதற்கு முன் ஏதாவது செய்யுங்கள்.
வாழ்க்கையில் துன்பம் வரும் போதும், இன்பம் வரும் போதும் இதை மனதில் வையுங்கள்.நீங்கள் எல்லையில்லா ஆற்றலை பெறுவீர்கள்.இவை உங்களின் பிறப்பின் ரகசியத்திற்கு உங்களை கூட்டிச்செல்லும்.நீங்கள் இறக்கும் போது இந்த உலகம் உங்களுக்காக அழும்.ஆனால் நீங்கள் அப்போது சிரித்துக் கொண்டு இருப்பீர்கள்.

No comments:
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..