About Me

Tuesday, August 5, 2014

காகிதங்களும் பேனாக்களும் - ஒரு காதல் ரொமான்ஸ்

பேனாக்கள் கண்டிப்பாக
ஆண்கள்தான் - அவை
காகிதங்களின் அங்கங்களைப் பற்றி
தன் இச்சைகளை - அதன் மேல்
பச்சை குற்றிவிடுகின்றன.
காகிதங்களும் பேனாக்களின்
காதல் பரிசுகளை
ஏற்றுக்கொள்கின்றன.
உண்மையில் எழுத்துகள்
உயிரற்ற இரு பொருட்களின்
காதல் இச்சைகள்.

எழுத்துகளுக்கு மனித இனத்தில் பெரிய வரலாறு உண்டு.எழுத்துகள் சிறந்த அறிவு கடத்திகள்.அவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவுச்செல்வத்தை கடத்திச்செல்கின்றன.மனிதன் முதலில் மணலில் குறியீடுகளாக குறிக்க ஆரம்பித்தான்.பின் களிமண்ணில் எழுதி நெருப்பில் சுட்டு, சுட்ட எழுத்துகளை பயன்படுத்த ஆரம்பித்தான்.அதன் பின் பனையோலை,எழுத்தாணி என ஆரம்பித்து காகிதம்,பேனா என அதன் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது.

எழுதும் முறைகளோடு மனிதனும் பரிணமித்துக்கொண்டே வந்திருக்கிறான்.இவ்வளவு பெரிய பரிணாம வளர்ச்சி ஏதோ ஒரு ஆதிமனிதன் தன் உணர்ச்சியை,கற்பனையை பதிய முயற்சி செய்தலின் விளைவாக வந்திருக்கிறது.பெரிய ஆறுகள் கூட சின்ன சுனையிலிருந்து தான் தன் பயணத்தை தொடங்கின்றன.அது போல் எங்கோ ஆரம்பித்த தனிமனித எழுத்து முயற்சி காலம் என்னும் பரிணாம ஓடையில் மெருகேற்றப்பட்டு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

எழுத்து முயற்சியென்பது வெறும் மைகளால் காகிதங்களை நிரப்புவது அல்ல.எழுத்துகள் தனி மனிதனின் அனுபவக்குறியீடுகள்.ஒரு எழுத்தாளன் என்பவன் மேகம் சூழ்ந்த வானிலையில் மழைக்காக காத்திருக்கும் உழவன் போல கற்பனைக்காக காத்திருக்கிறான்.சில நேரம் கற்பனையும்,அனுபவமும் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடலாம் அல்லது பொய்த்தும் போகலாம்.ஆனாலும் அவன் பொறுமையாக இருக்கிறான்.எழுதுவது செயல் அல்ல.அது ஒரு தவம் என்பது அவனுக்கு தெரியும்.அனுபவம்,சிந்தனை,ஆழந்த ஞானம் என எல்லாம் ஒரு புள்ளியில் சந்திக்கும் அந்த ஒரு கணத்திற்காக காத்திருக்கிறான்.

எழுத்துகள் வெறும் குறியீடுகள் தான்.ஆனால் எழுத்துகளால் மனித உணர்வுகளை தூண்டமுடியும்.சிலவகை எழுத்துகள் உணர்வுகளை தூண்டி அனுபவிக்கச்செய்கின்றன.சிலவகை மூளையை சிந்திக்கச்செய்கின்றன.எல்லா எழுத்துகளும் ஒருவிதத்தில் மலைப்பாதையை போன்றவை.அவைகளை பின் தொடர்ந்து செல்லும் போது உச்சியில் இருக்கும், எழில்மிகு காடுகளையும்,கோட்டைகளையும், பள்ளத்தாக்கின் ரகசியங்களையும் ரசிக்க முடியும்.

எழுத்துகள் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல்பரிசுகள்.தனிமையான அறையில் எழுத்தாளன் காகிதத்தையும்,பேனாவையும் காதலிக்க விடுகிறான்.பேனாவின் கடிவாளத்தை தன்கையில் பற்றி கற்பனையோடு காத்திருக்கிறான்.சில நேரங்களில் இந்த காத்திருப்பு நீண்டுகொண்டே இருக்கும்.அடித்தலும் திருத்தலுமாய் காதல் ஆரம்பிக்கும்.பின் சிறிது சிறிதாக பேனா காகிதங்களின் அங்கங்களை பற்றி அதன் மேல் புரள ஆரம்பிக்கும்.அப்போது எழுத்தாளான் தேர்ந்த குதிரை ஓட்டி போல் பேனாவின் கடிவாளத்தை பற்றி காகிதங்களின் அங்கங்களில் பேனாவின் துணையோடு தன் கற்பனையை பச்சைகுற்றி விடுகிறான்.

ஒவ்வொரு எழுத்தாளானும் ஒருவகையில் சுயநலக்காரன்.அவன் ஒரு காதலை தன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறான்.கண்டிப்பாக பேனாக்கள் ஆண்கள்தான்.அவைகள் தன் கூரிய நகங்களால் காகிதங்களில் அங்கங்களில் கீறிவிடுகின்றன.காகிதங்கள் அழகான காதலிகள்.அவைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் காதலனை அரவணைத்துக்கொள்கின்றன.காகிதங்களுக்கும், பேனாக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைய குறைய எழுத்துகள் பரிணமிக்கின்றன.அதன் உயிர்தன்மை ,நிலைப்புத்தன்மை அவர்களின் காதல் வலிமையை சார்ந்தது.எழுத்துகள் உண்மையில் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல் பரிசுகள்.எல்லா எழுத்துகளும் ஒருவகையில் தாஜ்மகால்கள்.

படிக்கவேண்டிய புத்தகங்கள்








Friday, August 1, 2014

உசாரய்யா உசாரு பஞ்சம் வரப்போகுது உசாரு

கடந்த சில வருடங்களாக நான் உன்னிப்பாக கவனித்துவரும் விசயங்களில் ஒன்று உணவுப்பொருட்களின் விலைவாசி.2011 ஆம் ஆண்டு நான் மதுரைக்கு குடியேறிய போது ஒரு சாதாரண ஓட்டலில் இரண்டு வகை காய்களுடன் நான் சாப்பிடக்கொடுத்து 30 ரூபாய்.அதே ஓட்டலுக்கு நான் இப்போது கொடுத்துக்கொண்டிருப்பது 60 ரூபாய்.நான்கு வருடங்களில் இரண்டு மடங்குவிலை கூடிவிட்டது என்றால் உண்மையில் இது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய விசயம்.அதிலும் எங்கள் குடும்பமே அரிசி வியாபாரம் செய்ததால் அரிசியின் விலை உயர் பற்றி தீவிரமாக சிந்தித்ததின் விளைவுதான் இந்த பதிவு.

அரிசியில் பொன்னி,கல்சர் பொன்னி,ஐ,ஆர்.20 என வகைகள் உண்டு.இதில் பொன்னி மேல் தட்டு மக்களால் வாங்கப்படும் வகை.ஏனென்றால் அதன் விலை கிலோ 40 லிருந்து 60 வரை இருக்கும்.கல்சர் பொன்னியின் விலை 20 லிருந்து 40 வரை இருக்கும், ஆனால் கடைக்காரர்கள் எல்லாவற்றையும் பொன்னியென்றே நாமம் சாத்தி விற்று விடுவார்கள்.இதிலும் விளைந்து நீண்ட நாள் ஆன அரிசியை பழைய அரிசியெனவும்,விளைந்து கொஞ்சநாளே ஆன அரிசியை புது அரிசியெனவும் அழைப்பார்கள்.சுருக்கமாக ஒரு வருட பழசு அல்லது ஆறு மாத பழசு என குறிப்பிடுவார்கள்.ரொம்ப பழைய அரிசிக்கு மொளசு அதிகம்.ஏனென்றால் அது குழையாது. அரிசியின் கணிசம் அதிகமாக இருக்கும்.இங்கே கணிசம் என்பது முக்கியமான ஒரு சிந்திக்க வேண்டிய விசயம்.ஒருவருக்கு 100 கிராம் கணிசமான அரிசி ஒரு வேளை வயிறு நிறைய தேவைப்படுகிறது  என வைத்துக்கொள்வோம்.அதே நபர் கணிசம் குறைந்த அரிசியை சாப்பிட்டால் அவருக்கு 200 கிராம் வயிறு நிறைய தேவைப்படும்..எனவே கணிசம் என்பது  வயிறு நிறையும் தன்மை எனக்கொள்ளலாம்,கணிசத்தை கவனிக்க தவறினால் மாத பட்ஜெட்டில் போர்வையே விழுந்துவிடும்.

நான் சிறுவயதாக இருக்கும் போது 100 மூடை உள்ளூர் அரிசியென்றால் 10 மூடை கர்நாடக பொன்னி இருக்கும்.கர்நாடக பொன்னி விலை குறைவாக இருந்தாலும், கணிசம் மற்றும் தரம் கம்மியாக இருந்ததால் வாங்க ஆள் இருக்காது.ஆனால் நான் இப்போது கர்நாடக பொன்னி தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.ஏனென்றால் உள்ளூரில் விளையும் பொன்னியின் விளை 60 ஐ தொட்டுவிட்டது.

தீண்டவே ஆளில்லாத அரிசி இன்றைக்கு சிம்மாசானத்தில்.உள்ளூர் அரிசியோ தீண்ட முடியாத விலை உயரத்தில்.என்ன காரணம்?

ரொம்ப எளிமையான காரணம் தான்.விளைச்சல் குறைந்துவிட்டது.உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.நான்கு வருடங்களில் இரண்டு மடங்கு விலைஉயர்வு என்றால் நான்கு வருடங்களில் விளைச்சல் இரண்டு மடங்கு குறைந்து விட்டதாகத்தான் அர்த்தம். விளைச்சல் குறைவுக்கானக்கான காரணங்கள் என்ன?

1.பருவநிலை மாறுபாடு
2.விவசாயம் ஊக்குவிக்கபடாமல் அடுத்த தலைமுறை விவசாயிகள் இல்லாமல் போய்விட்டனர்.
3.தண்ணீர் அரசியல்

பருவநிலை மாறுபாட்டுக்கு நாம் தான் முழுக்காரணம்.குறிப்பாக மரங்களின் அழிவு,தமிழ் நாட்டில் ஊக்குவிக்கப்படும் தொழிற்ச்சாலைகளினால் ஏற்படும் சுற்றுப்புற மாசுபாடு,உலகலாவிய வெப்ப உயர்வு.இதனால் பருவமழை தவறிவிடுகிறது.எனவே விவசாயிகள் அரசையும், நிலத்தடி நீரையும் நம்பி இருக்க வேண்டி இருக்க வேண்டியுள்ளது.தனியார் கம்பெனிகளின் தண்ணீர் சுரண்டல்களினால் நிலத்தடிநீரின் அளவும் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது.மேலும் அரசு விவசாயத்தை ஊக்குவிக்காமல் ஒரு தன்னுடைய ஒரு தலை பட்சமான கல்வி மற்றும் தொழில் அணுகு முறையால் அடுத்த தலைமுறை விவசாயிகளே இல்லாமல் போய்விட்டனர்.வேறு வழியில்லாமல் விவசாயிகள் பக்கத்து மாநிலங்களை தான் தண்ணீருக்காக நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.கேரளமும் கர்நாடகமும் நமக்கு தண்ணீர் தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கப்போகிறார்கள்.

நிறைய பேருக்கு கர்நாடகம் ஏன் தண்ணீர் தருவதில்லை என்ற காரணமே தெரிவதில்லை.ஏற்கனவே மேலே சொன்னபடி அரிசி விவகாரத்தில் நம் போட்டியாளர்களே அவர்கள் தான்.அவர்கள் நமக்கு நிறைய தண்ணீர் தருவார்களாம்.நாம் முப்போகம் விளைவித்து அவர்களுடனே போட்டி போடுவோமாம்.கர்நாடகம் கையை சூப்பிக்கொண்டு வேடிக்கைபார்க்குமாம்.உண்மையில் இந்த தண்ணீர் அரசியலில் அழவேண்டியது நாம் தான். விவசாயிகள் அல்ல.இன்னும் சில வருடங்களில் நம் சொந்த விவசாயமே அழியப்போவதின் அறிகுறிதான் இவையெல்லாம்.அப்போது யானைவிலைக்கு குதிரைவிளைக்கு போகப்போகிறது அரிசிவிலை.இதையெல்லாம் தமிழகத்தின் ஒட்டு மொத்தவிவசாயத்தையே குலநாசம் செய்ய ஒருதிட்டத்தை செயல்படித்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.அதை பற்றி அடுத்த கட்டுரையில்.

எங்கள் அப்ப எங்களை எதற்காவும் வீட்டில் கண்டித்ததில்லை.ஏன் திட்டியது கூட இல்லை.ஆனால் ஒரு விசயத்தை தவிர.அது என்ன தெரியுமா?சாப்பிடும் போது சிந்தும் ஒரு துளி அரிசி மணிக்காக.சிந்தினாலும் பொறுக்கி தட்டில் போட்டு சாப்பிடச்சொல்வார்.ஏன் என்பதற்கு அவரே காரணம் சொல்வார்.ஒரு அரிசி மணி விளைய ஆறு மாதங்கள் வெயில், மழை, காற்று என்று பாராமல் உழைத்து கண்ணின் மணியை போல் பாதுகாக்கிறார்கள்.ஒரு மணி என்பது ஒரு விவசாயின் ஆறுமாத உழைப்பு.அதை விரயம் செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

நாம் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பசியென்றால் கைவைக்கப்போவது என்னவோ சோற்றில் தான்.சோற்றில் கைவைக்கும் போது உங்களுக்காக சேற்றில் கால்வைத்த மினிதர்களை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.அவர்களும் மனிதர்கள் தானே.

"சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.

படிக்கவேண்டிய புத்தகங்கள்








Thursday, July 31, 2014

கொள்ளிவைக்கும் இஸ்ரேல்,சுடுகாடாகும் பாலஸ்தீனம்

ஒரு துப்பாக்கிகுண்டால்
மரணத்தை பரிசளித்தார்கள்.
மரணத்தை உறுதிசெய்ய -மேலும்
இரண்டுகுண்டுகளை பரிசளித்தார்கள்.
உடல்சிதறி
நிலமெல்லாம் ரத்தகளமாய்
பிணக்குவியல்களுக்கு நடுவே
புனிதமானவர்களின் புனிதமும்,
போராட்டக்காரர்களின் கொள்கைகளும்,
காக்கப்படுகின்றன
.



தினசரி செய்தித்தாள்களை பார்க்கும் போது ஒரே வெறுப்பாக இருக்கிறது.இஸ்ரேல் பாலஸ்தீன போரால் தினமும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் போய்க்கொண்டிக்கின்றன.எதையும் செய்யமுடியாமல் உலகத்தோடு சேர்ந்து நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சொந்த தாய்மண்ணை அபகரித்துவிட்டார்கள் என்று பாலஸ்தீனமும்,தங்களை எதிர்க்கிறார்கள் என்று இஸ்ரேலும் காரணம் சொல்லிக்கொண்டு கொல்வது என்னவோ அப்பாவி பொதுமக்களைத்தான்.
இங்கே மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அர்ப்பமான கொள்கைகள்,வரலாறு,மதரீதியான நம்பிக்கை என இரு சாரராக பிரிந்துகொண்டு போரை ஊக்குவிக்கும் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறார்கள்.அதுவும் ஒரே நாடு, ஒரே இனம்,ஒரே மக்கள் என்று சொல்லும் இந்தியர்கள் கூட அணி அணியாக பிரிந்து நியாய தர்மம் பேசி ஏதோ ஒரு தரப்பை ஊக்குவிப்பதுதான் வேதனைதரும் விசயம்.

நாம் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு பேசும் நியாய தர்மங்கள் துப்பாக்கியின் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை ஒரு போதும் காப்பாற்ற போவதில்லை.பல்லாயிரகணக்கான மக்களை கொன்று அவர்களின் சவக்குழியின் மேல் அமைதி பூங்காவைகட்ட நினைக்கிறது இஸ்ரேல்.கடந்த கால துரோகங்களையும்,மத உணர்வுகளையும் காரணம் காட்டி தன் இனத்தை தானே இழந்து கொண்டிருக்கிறது பாலஸ்தீனம்.

இவையெல்லாம் நம் மனிதன்மையை கேள்விக்குறிகளாக்குகின்றன.இங்கே மனித உயிர்கள் புழுவினும் கீழ்நிலைகளாக கருதி கொல்லப்படுகின்றன.வேதனையிலும் வேதனை தரும் விசயம் இதை உலகமே கைகட்டி,வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதுதான்.ஒரு லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்தான் ஹிட்லர்.ஆறு லட்சம் தமிழர்களை கருவறுத்தான் ராஜபக்சே.இப்போது இஸ்ரேல் செய்வதுமட்டும் புனிதப்போராகவா ஆகிவிடப்போகிறது.

உலகின் அதிபயங்கர புத்திசாலிகள் என மார்த்தட்டிக்கொள்ளும் யூத இஸ்ரேலியர்களே மக்களை கொத்துக்கொத்தாக கொல்வதுதான் புத்திசாலித்தனமோ?உயிரின் வலி,போரின் வக்கிரங்களை தலைமுறை தலைமுறைகளாக அனுபவித்த நீங்கள் மற்றவருக்கு அதையே பரிசளிப்பது தகுமோ?

பாலஸ்தீன போராளிகளே நீங்களும் ஒன்றும் புனிதர்கள் அல்ல.உங்கள் கொள்கைகளும் ஒன்றும் புனிதமானவை அல்ல.உங்கள் கொள்கைகள் வெறும் இடத்திற்காகதான்.உங்கள் கொள்கைகளால் போவது என்னவோ அப்பாவி உயிர்கள்தான்.போராட்டத்தை கைவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை.போராடும் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்.கத்தியின்றி ரத்தமின்றி அறவழியில் போராடுங்கள்.மிச்சம் இருப்பவர்களாவது வாழட்டும்.

அமைதியென்பது சுடிகாட்டிலும் இருக்கிறது,பூந்தோட்டத்திலும் இருக்கிறது.உங்கள் துப்பாக்கிகளும் கொள்கைகளும் உங்களுக்கு கொடுக்கப்போவது என்னவோ மயானத்தைதான்.நாடு,இன கொள்கைகளை தாண்டி மனிதனாக வாழப்பழகுங்கள்.மழைக்கு இரவில் ஒதுங்கும் ஒரு ஆட்டுக்குட்டியை தன்வீட்டீல் அனுமதிக்காத மனிதன் உலகில் இல்லை.ஆனால் வீடில்லாத, வாழ வழியில்லாத, சக மனிதனை அரவணைத்து வாழத்தெரியாத மனிதநேயத்தை என்னவென்று சொல்வது.

இந்த பூமி எல்லோருக்கும் சொந்தம்.அதன் மேல் கிறுக்கியிருக்கும் எல்லைக்கோடுகள் மனிதனை தடுத்துவிடமுடியாது.போரை நிறுத்துங்கள்.எல்லை தாண்டி,கொள்கை தாண்டி மனிதநேயத்துடன் மனிதனாக வாழுங்கள்.மற்றவரையும் வாழவிடுங்கள்.நாளைவிடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.



படிக்கவேண்டிய புத்தகங்கள்








Thursday, July 24, 2014

என் கேள்விக்கு என்ன பதில் சுப வீரபாண்டியன் அவர்களே?

இந்த கட்டுரை சுப வீரபாண்டியன் அவர்கள் http://tamil.oneindia.in/ இணையதளத்துக்கு எழுதிய கட்டுரைக்கு என்னுடய கருத்துரையாக எழுதப்பட்டது.அவர்கள் என் கருத்துரையை ஏற்க மறுத்துவிட்டதால்.அதை இங்கே பதிவாக இடுகிறேன்.அந்த கட்டுரைய  இங்கே படித்துவிட்டு பதிவை படிக்கவும்.









முதலில் தங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இங்கே ஜன்ஸ்டீனின் பொது சார்புக்கொள்கையை பற்றி கூறி உள்ளீர்கள்.ஆனால் அவர் கூறிவிட்டதால் மட்டும் அது உண்மையாகிவிட முடியாது.எல்லா கொள்கைகளும் ஓர் எல்லைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன.ஏன் ஒளியை மிஞ்சக்கூடிய எந்த பொருளும் இல்லை என்ற ஜன்ஸ்டீனின் கொள்கையையே நியூட்டினோக்கள் தகர்த்துவிட்டன.

உண்மையில் பெரும்பாலான அறிவியல் கொள்கைகள் முதலும் இல்லாமல் தொடக்கமும் இல்லாமல் முழித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன.கண்ணால் பார்ப்பதை மட்டும் நம்புவேன் என்றால் கண்ணால் பார்க்க முடியாத காற்றை யாருமே நம்ப முடியாது.

உண்மையில் அறிவியல் ஒன்றும் முற்று பெறவில்லை.அது இன்னும் அறைகுறையாக தான் உள்ளது.ஏன் அறிவியலே சொல்லுகிறது ஒரு பிரபஞ்சம் அல்ல கோடான கோடி பிரபஞ்சங்கள் உள்ளன என்று.மேலும் நம் முடைய அறிவியல் கொள்கைகள் மற்றொரு பிரபஞ்சத்தில் செல்லுபடியாகாது.

அப்படியென்றால் நீங்கள் மேற்கோள்காட்டும் அறிவியலே பிரபஞ்சம் என்ற எல்லைக்கு உட்பட்டது என்றால் உங்கள்வாதாமும் இப்பிரபஞ்சத்திற்கு உட்பட்டதுதான்.மார்க்ஸ்,ஜன்ஸ்டீன் அல்லது மேலை நாட்டு விஞ்ஞானிகள் சொல்வது இருக்கட்டும்.நம் முன்னோர்கள் சொன்ன கடவுள் வழி கருத்துகள் பாமரனால் தவறாக புரிந்துக்கொள்ளபட்டு இருந்தாலும் படித்தவர்களான நாம் அதை சரியாக புரிந்துகொண்டு ஆராய வேண்டியுள்ளது.ஆனால் நாம் ஆராயமலே தவறு என்று முடிவு கட்டிவிட்டோம்.

ஏன் ஜெனிவாவிலே நடராஜர் சிலை உள்ளது.அங்கே உள்ளவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள்தாம். அவர்களுக்கு கடவுள் மறுப்பு அறிவியல் தெரியாமலா சிலை வைத்தார்கள்?முதலில் அறிவியல் முழுமையாக முற்று பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.பின் அதை வைத்து எழுதிய தத்துவவிலாசங்களை பேச அலச ஆரம்பிப்போம்.

மனிதன் பகுத்தறிந்து முழு விழிப்போடு வாழ மட்டுமே அறிவியல்.அதை வைத்துக்கொண்டு பாமரனின் அடிப்படை நம்பிக்கையை சிதைப்பது அநியாயம்.

Wednesday, July 23, 2014

கணிதமேதை ராமானுஜன் :- பிரபஞ்சத்தின் புதிர்

கணிதமேதை ராமானுஜத்தை பத்தி எழுத வேண்டும் என்று ரொம்ப வருடத்திற்கு முன்னாடியே யோசிச்சிருந்தேன்.ஆனால் அவரைப்பற்றி நான் எழுத நினைத்த தலைப்புக்கு நிறைய கடினமான அறிவியல் தலைப்புகள் தேவைப்பட்டது.அவற்றையெல்லாம் எல்லோருக்கும் புரியும்படி எழுத முடியுமா? என்ற சிந்தனையில் எழுத முடியாமல் போய்விட்டது.இப்போது அவரைப்பற்றிய திரைப்படம் வெளியாகி உள்ளது.இது அவரைப்பற்றி எழுத சரியான தருணம் என நினைக்கிறேன்.

ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறைப் பற்றி நான் இங்கு எழுதப்போவதில்லை.ஆனால் மேற்கில் வாழும் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானியின் பார்வையில் ராமானுஜத்தை பற்றி எழுதப் போகிறேன்.அவர் தான் "மிக்கியோ கக்கூ (Michio Kaku)".புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான கக்கூ தனது உயர்பரிமாணங்கள்(hyperspace) என்னும்  நூலில் ராமானுஜத்தை பற்றி சிலேகித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்.

"கணித உலகில் ராமானுஜம் ஒரு விந்தையான மனிதர்.அவரை ஒரு வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் வலிமையோடு ஒப்பிடலாம்.நூறு வருடங்கள் மேற்கில் உள்ள அத்தனை கணித வல்லுனர்களும் சேர்ந்து கண்டுபிடித்த அத்தனை கணித கோட்பாடுகளையும்,சூத்திரங்களையும் தனிமனிதனாக 33 வயதிற்குள் மறு உருவாக்கம் செய்தார்.மேற்கு உலக தொடர்பில்லாததால் தான் கண்டிபிடித்த பல விசயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவை என்று தெரியாமலே தன் வாழ்வின் பெரும்பகுதியை அதில் செலவிட்டார்.

ராமானுஜம் மொத்தம் 400 பக்கங்களில் 4000 சூத்திரங்களை எழுதியுள்ளார்.அவற்றில் சில சூத்திரங்கள் மிக வினோதமானவை.இந்த வினோத சூத்திரங்கள் மாடுலர் பங்சன் என்னும் கணித பிரிவின் கீழ் வருகின்றன.மேலும் ராமானுஜத்தை கவுரவிக்கும் பொருட்டு இவை "ராமானுஜன் பங்சன் (RamanujanThetaFunction)"  என்றே அழைக்கப்படுகின்றன.இவற்றில் மிக விசேசம் என்னவென்றால் இந்த வினோத சூத்திரங்களில் ஆங்காங்கே 24ன்  அடுக்கு என்று இடம் பெருகிறது.இந்த 24 என்ற என்னை விஞ்ஞானிகள் மேஜிக்கல் நம்பர் என்கிறார்கள்.ஏன் இதை மேஜிக்கல் நம்பர் என்று புரிந்துகொள்ள நாம் சில உயர் அறிவியல் கோட்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை இந்த பிரபஞ்சம் மூன்று பரிமாணங்களை (dimension) கொண்டது.இதை நாம் ஏற்கனவே பள்ளிகளில் X,Y,Z என வரைபடத்தாளில்(graph) மூன்று தளங்களாக பிரித்து படித்திருக்கிறோம்.சுருக்கமாக (மேல்,கீழ்),(இடது,வலது),(முன்,பின்) என முப்பரிமாணங்களாக குறிக்கலாம்.பின்னால் வந்த ஜன்ஸ்டீன் தனது பொது சார்பியல் கொள்கையில்(general theory of relativity) காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நான்கு பரிமாணங்கள் ஆக்கினார்.ஆனால் தற்போதைய இயற்பியல் கூற்றுப்படி இந்த பிரபஞ்சம் பத்து பரிமாணங்கங்களை கொண்டது.சரி அது என்ன சரியாக 10 பரிமாணம்?ஏன் 9 இருக்கக்கூடாதா? என கேட்கலாம்.ஆனால் இந்த காரணத்தை அறிந்த ஒரே மனிதர் ராமானுஜம் மட்டுமே. 

இயற்பியலில் நூலிழைக்கோட்பாடு(string theory) என்று ஒன்று உள்ளது.இந்த நூலிழைக்கோட்பாட்டின் படி பிரபஞ்சமே அடிப்படையில் மெல்லிய நூலிழைகளால் ஆனது.ஏன் இந்த பிரபஞ்சமே இரண்டு பெரிய உயர்பரிமாண நூலிழைகளின் மோதலினால் தான் உருவானது.அடிப்படை துகள்களான புரோட்டான்,எலெக்ரான் என எல்லாமே சாதாரண நூலிழைக்களின் மாறுபட்ட தோற்றங்கள் தான்.



இந்த நூலிழைகளை எப்படிகற்பனை செய்லாம் என்றால் குண்டு பல்பின் நடிவில் இருக்கும் டங்ஸ்டன் இழையோடு ஒப்பிடலாம்.தூரத்தில் இருந்து பார்க்கும் போது டங்ஸ்டன் இழை சாதாரண கம்பி போல் தொன்றினாலும் மிக அருகில் நெருக்கமாக பார்க்கும் போது நெருக்கமாக சுற்றப்பட்ட லேசான நீண்ட கம்பி என்பது புரியும்.அது போல் எலெக்ட்ரான்,புரோட்டான் அருகில் தூரத்தில் பார்த்தால் துகள் போல் தோன்றினாலும் அருகில் பார்த்தால் டங்ஸ்டன் இழை போல் நெருக்காமாக சுற்றப்பட்ட உயர்பரிமாண இழைகளால் ஆனவை.இந்த இழைகளின் அதிர்வு மற்றும் நிறையைப்பொறுத்து அது எலெக்ட்ரானாகவும்,புரோட்டானாகவும் தெரிகிறது.

இந்த நூலிழைகள் தானாக அறுந்தும் மற்றொரு நூலிழையோடும் சேர்ந்து புது புது அணு துகள்களை உருவாக்குகின்றன.இப்படி இவை இணைந்து உருவாக்கும் ஜோடிகளும் அதன் அதிர்வெண் பரிமாணங்களும் முடிவிலியாக இருக்கின்றன.ஆனால் ராமனுஜன் பங்சனை பயன்படுத்தும் போது முடிவிலிகள் கரைந்து சரியாக 24 வகையான ஜோடிகளும், அதிர்வெண் பரிமாணங்களும் வருகின்றன.


ராமனுஜன் பங்சனை பொதுப்படையாக்கும் போது 24 என்பது சுருங்கி 8 ஆகிறது.எனவே இந்த பிரபஞ்சம் (8+2)=10 பரிமாணங்களை கொண்டதாகிறது.இவற்றில் ஒன்றை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ முடிவிலியில் போய் நிற்கிறது.உண்மையில் ராமனுஜன் சொன்ன 24 என்ற எண் இயற்பியலாளர்களை பொருத்தவரை மேஜிக் நம்பர்தான்.ஆனால் ஏன் 24 என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.ஆனால் இதை உருவாக்கிய ராமானுஜனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு முறை ஜன்ஸ்டீன் இப்படி சொன்னார்.
"இந்த உலகத்தை படைக்கும் போது கடவுள் என்ன நினைத்தார்?எப்படி படைத்தார் என்பது தெரியவேண்டும்.மற்றவை பற்றி எனக்கு கவலை இல்லை என்றார்."
ஜன்ஸ்டீனின் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரே மனிதர் ராமானுஜன் மட்டுமே.ஆனால் அவரும் இப்போது உயிரோடு இல்லை.உண்மையில் பிரபஞ்சத்தை போலவே ராமானுஜனும் ஒரு புரியாத புதிர்தான்.

Friday, July 11, 2014

உன்னை நான் பார்த்த பின்

உன்னை நான் பார்த்த பின்
முன்பு போல் இல்லையே!
என்னையே கேட்கிறேன்
எங்கு நான் தொலைந்தேனோ?

மண்ணிலே பிறந்தேனோ?
மழையிலே கரைந்தேனோ?
காற்றிலே கலந்தேனோ?
கூந்தல் வாசம் நுகர்ந்தேனோ?

கால தூரம் கடந்தேனோ?
காம ஏக்கம் உணர்ந்தேனோ?
சொர்க்கமே சென்றாலும் உன்
பிரிவு ஏக்கம் கொல்லுதடி.

உன்னையென்று பார்த்தேனோ?
உயிரை தொலைத்துவிட்டேனே.
கண்ணிழந்த குருடர்கள்
யானை தடவி பார்ப்பது போல்,
கண்ணில் கண்ட பொருளெல்லாம்
உன்னை பார்க்க நினைக்கிறேன்.

மொட்டைமாடி போகிறேன்.
ஒற்றைக்காலில் நிற்கிறேன்.
தனிமையோடு பேசுகிறேன்.
தவமாய் கிடக்கிறேன்.

Friday, June 27, 2014

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கான கவிதைகள்
எழுதப்படாமல் காத்திருக்கின்றன.
உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள்
பரிமாறப்படாமல் இதயக்கூட்டில் காத்திருக்கின்றன.
உனக்கான முத்தங்கள்,
உனக்கான ரோஜா,
உனக்காக சேகரித்த மயிலிறகு,
நாம் கைகோர்த்து நடக்க வேண்டிய
கடற்கரை மணற்பரப்பு,
இரவின் நிழல்,
நிலவின் மடி,
குளிர்கால போர்வைகளென,
எல்லாம் காத்திருக்கின்றன,
உன் ஒற்றை சொல்லுக்காக,
எப்போது சொல்லப்போகிறாய்?
உன் காதலை என்னிடம்.


Wednesday, June 25, 2014

தன்னம்பிக்கை நேரம்::உன்னையே நீ அறிவாய்

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் கேட்கச்சொன்னார் சாக்ரடீஸ்.ஆனால் அவ்வாறு கேட்பதானால் ஆகும் விளைவுகளை அவர் சொல்லவே இல்லை.உண்மையில் இந்த உலகை புரட்டிப்போட்ட அத்தனை விசயங்களும் கேள்விகள் கேட்டதினாலே விளைந்தவை.சரி ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?கேள்வி
கள் கேட்பதனால் என்ன பயன்? யாரிடம் கேள்விகள் கேட்பது?

கேள்விகள் தான் மனித பரிணாமத்தின் முதல் படிக்கட்டுகள்.எப்போது மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தானோ? அன்றே அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.உண்மையில் சிந்தனை என்பது பல கேள்வி பதில்களின் கூட்டுத்தொகுப்பு.நாம் சிந்திக்க வேண்டுமானால் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.சரி யாரிடம் கேள்விகள் கேட்பது?கேள்விகள் மனிதன் தனக்குதானே கேட்டுக்கொள்ள வேண்டியவை.ஆனால் நம்மில் பெரும்பாலானோர் கேள்விகளை மற்றவரிடம் கேட்டு நம் மேதாவிலாசங்களை காட்டிக்கொண்டிருக்கிறோம்.பிரச்சனை என்னவென்றால் நமக்கு புரியாத விசயங்களை மற்றவரிடம் கேட்கும் போது அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.நம் கேள்வி நம்மை புத்திசாலியாக அடையாளம் காட்டிவிடுகிறது.ஆனால் அது ஒரு போலி அடையாளம்.ஏனென்றால் நமக்கு பதில் தெரியவில்லை.இப்படிதான் இந்த உலகம் கேள்விகளால் புத்திசாலிகளை அடையாளம் காணுகிறது.கேள்விகள் என்றும் நிரந்தரமானவை.பதில்கள் வெறும் கானல் நீர்.

ஏதென்ஸ் மக்கள் அந்த ஊர் கோவிலில் உள்ள மாந்தீரக பெண்ணிடம் கேட்டார்கள்.இந்த ஊரிலே எல்லாம் தெரிந்த மேதையார் என்று.உடனே அந்த பெண் சொன்னாள் சாக்ரடீஸ்.எல்லாரும் சாக்ரடீஸிடம் போய் இதை சொன்னார்கள்.அதற்கு அவர் சொன்னார் "எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.ஆனால் நீங்களோ எல்லாம் தெரிந்தவர் போல் நடித்துக்கொண்டு இருக்குறீர்கள்".அதனால் தான் நான் மேதையாக தெரிகிறேன் என்றார்.

ஒரு அற்புதமான கதை ஒன்று சொல்வார்கள்.ஒரு ஊரில் ஒரு முட்டாள் இருந்தான்.ஊர் மக்கள் அனைவரும் அவனை முட்டாள் முட்டாள் என்றே அழைத்தார்கள்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மனிதன் ஊருக்குள்ளே வசிக்காமல் ஊரின் வெளியே வசித்துவந்தான்.ஒரு நாள் ஒரு ஜென் குரு அந்த பக்கமாக கடந்து போவதைப்பார்த்த அந்த மனிதன் அவர் காலில் விழுந்து தன் பிரச்சனையை விளக்கி கூறினான்.அவரும் அவனிடம் யார் என்ன சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இரு என்றார்.தான் ஒரு வருடம் கழித்து இந்த பக்கம் கடந்து போகும் போது தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார்.ஒரு வருடமும் கடந்து சென்றது .அந்த குரு மீண்டும் அந்த ஊரை கடந்து சொல்லும் போது ஊரே அந்த முட்டாள் மனிதனை தோளில் சுமந்து கொண்டு குருவை வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர்.குரு அந்த மனிதனிடம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா எனக்கேட்டார்.அதற்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஊரே தன்னை அறிவாளியென்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் கூறினான்.இந்த கதை பதில் தெரியாமல் கேள்வியோடு மட்டும் நின்று போகும் மனிதர்களைப் பற்றியது.

கேள்விகளை நமக்கு நாமே கேட்கும் போது நமது அறியாமை நமக்கு புரிகிறது.மற்றொன்று அறியாமை நம் அறியும் ஆவலை தூண்டி நம் தேடலை ஆரம்பித்து வைக்கிறது.தேடல் நம்மை எல்லையற்ற புரிதலின் ஆழத்திற்கு கூட்டிச்செல்கிறது.ஜென்னில் ஒரு அற்புத வரி சொல்வார்கள்."நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது ஒரு குரு உங்கள் முன் தோன்றுவார்".அதே சமயம் நாம் தேடும் பொருளும் நம்மை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.தேடல் நம்மை அறிவின் உச்சத்திற்கு இட்டுச்சென்று பிரகாசிக்க வைக்கிறது.

தன் மேல் ஏன் ஆப்பிள் விழுந்தது என தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தேடி புறப்பட்டார் நியூட்டன்.விளைவு நவீன அறிவியலின் தந்தை ஆனார்.ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தால் என்னவாகும் என் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தன்னைதானே கேட்டுக்கொண்டதன் விளைவுதான் ஜன்ஸ்டீனின் "சார்பு மற்றும் சிறப்பு சார்புக்கொள்கை".சாக்ரடீஸ்,நீயூட்டன்,ஜன்ஸ்டீன் என எல்லோரும் கேள்விகளை தனக்கு தானே  கேட்டுக்கொண்டார்கள்.தீராத தேடல் அவர்களை தொற்றிக்கொண்டது.அதனால் தான் அவர்கள் அறிவின் உச்சத்தை தொட்டார்கள்.உன்னையே நீ அறிவாய் என்பதன் பொருள்.உன்னையே நீ கேள்விகேட்டு தேட ஆரம்பி என்று பொருள்.உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.தீராத தேடல் உங்களை தொற்றிக்கொள்ளட்டும்.

Tuesday, June 24, 2014

தன்னம்பிக்கை நேரம் :: எங்கிருந்து ஆரம்பிப்பது?



நம்மில் சிலருக்கு ஒரு விசயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? என்பதே தெரிவதில்லை.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.ஒரு விசயத்தின் ஆரம்பமே தவறு என்றால் முடிவு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்.நாம் தொடங்கும் இடத்தை பற்றி சரியாக யோசிக்கவில்லை என்றால் முடிவில் காணமல் போய்விடுவோம்.உண்மையில் சிறப்பான திட்டமிட்ட தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள்.

சரி எங்கிருந்து ஆரம்பிப்பது,எப்படி ஆரம்பிப்பது?
உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் இரண்டு வகையான வழிகள் உண்டு.ஒன்று சிந்தனை வழி மற்றொன்று செயல் வழி.நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்பட ஆரம்பித்துவிடுவோம்.ஆனால் வெகு சிலரே சிந்தித்துபின் செயல்பட தொடங்குகிறோம்.

நம்மில் எத்தனை பேர் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளைப் பற்றி சிந்தித்து பின் செயல்பட தொடங்குகிறோம்.அதாவது நம் இலக்குகள் என்ன?திறமைகள் என்ன?பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன?என்பதை பற்றி சிந்தித்திருக்கிறோம்.ஒரு நாளில் நாம் செய்யப்போகும் வேலைகள் எந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்? என்பதில் நமக்கு தெளிவு இல்லை என்றால் அந்த வேலையின் பலன் தான் என்ன?

இந்த உலகத்தில் உள்ள எல்லா விசயங்களும் மேம் போக்காக எளிமையாக இருந்தாலும் அடிப்படையில் மிகவும் சிக்கலானவை.உதாரணமாக வீட்டில் மனைவியின் சமையலை எளிமையாக குறை சொல்லிவிடலாம்.ஆனால் அதை நாம் செய்யும் போது தான் உணர முடியும் அதன் கடினத்தை.கொஞ்சம் யோசித்து பார்த்தால் சமையல் பல பொருட்களின் ஒரு சிக்கலான கலவை.அதில் ஒன்று குறைந்தாலோ அல்லது கூடினாலோ முழுவதும் பாலாகிவிடும்.எனவே சிந்திக்கும் போது விசயங்களின் அடி ஆழம் முழுமையாக தெரியவரும்.

மேலும் நான் பலரை பார்த்திருக்கிறேன். உடல் எடையை குறைக்கிறேன் பேர் வழி தங்களை உடலை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள்.உண்மையில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஆழமாக சிந்திக்க வேண்டியது.அதாவது உண்ணும் உணவுகள்,உண்ணும் விதம் என எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பின் செயலில் இறங்க வேண்டும்.

உண்மையில் நம் உடம்பை கட்டுப்படுத்துவது மூளை.அதற்கு சரியான கட்டளைகள் இட்டுவிட்டால் அது நம் உடல் முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஓடு என்று மூளைக்கு தற்காலிக கட்டளையிடுகிறோம்.உடனே உடல் ஓடிக்கொண்டே இருக்கும்.ஆனால் எதற்காக ஓடுகிறோம் என்று மூளைக்கு தெரியாது.சாப்பிடாதே என்று வாய்க்கு கட்டளையிடுகிறோம்.அதை வாய் கேட்பதே இல்லை.இங்கு தான் எல்லோரும் தோற்று போய்விடுகிறோம்.உண்மையில் உடல் எடை என்பது பல விசயங்களின் சிக்கலான தொகுப்பு.

நம் கண் ஒரு சுவையான சிக்கன் வறுவலை பார்க்கிறது.உடனே மூளைக்கு தகவல் போகிறது.உடனே மூக்கும் தன் பணியை ஆரம்பித்து மூளைக்கு தகவல் போகிறது.எல்லா தகவல்களையும் ஆராய்ந்து சிக்கன் வேணுமா?வேண்டாமா? என்று மூளை முடிவு செய்கிறது.வேண்டும் என முடிவாகி நாக்கு மற்றும் குடலில் அமிலங்கள் சுரந்து உணவை செரிக்க தயாராகின்றன.உற்றுப்பார்த்தால் நன்றாக புரியும் நம் மூளைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.நம் மூளைதான் முதலாளி, உடம்பு வெறும் தொழிலாளர்கள்.நமக்குள் என்ன நேர்ந்தாலுல் நாம் பரிசோதிக்க வேண்டிய முதல் ஆள் மூளை.

நம் மூளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மான முடிவெடுக்க நாம் ஒதுக்கும் நேரம்தான் சிந்திக்கும் நேரம்.ஒரு முறை தெளிவாக மூளை முடிவெடுத்து விட்டால் மற்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக்கொள்ளும்.உலகின் ஆகச்சிறந்த செல்வந்தர்கள்,மனிதர்கள்,படைப்பாளிகள் என எல்லோரின் வெற்றிக்கும் காரணம் அவர்கள் சிந்தக்க நேரம் ஒதுக்குகிறார்கள்.உண்மையில் நாம் சிந்தக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க ஆரம்பிக்கிறோம்.நாம் கவனிக்க ஆரம்பிக்கும் போது புரிய ஆரம்பிக்கிறது.எல்லாம் புரிய ஆரம்பிக்கும் போது நாம் வளர ஆரம்பிக்கிறோம்.

காலை எழுந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் அமைதியாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அன்றைய நாளைப்பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்.அது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அடையாளம் காட்டலாம்.எனவே எல்லாவற்றையும் சிந்தித்து,நமக்கு தெரிந்த விசயங்களில் இருந்து செயல்பட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

Friday, June 20, 2014

தன்னம்பிக்கை நேரம் :: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.

"அப்பா இங்கே பாருங்கள் மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால்  ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள் மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக்குருடன்.இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."


உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.

கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்.


Thursday, June 19, 2014

பொட்டல்கள்

வெயிலும் கருவேல மரமும்
கைகோர்த்து நிற்கும்
பொட்டல் காட்டில்,

ஒழுகல் மூக்கும்
ஓட்டை டவுசர் சகிதம்
டயர் வண்டியுடன்
மகாராஜாவாக வலம்
வந்தவர்கள் ஏராளம்.

ரெட்டை ஜடை
குட்டை பாவடை சகிதம்
பொம்மை குழந்தைகளை
வளர்த்த அம்மாக்கள் ஏராளம்.

இச்சி மரத்தடியில்
ஊரத்தண்ணி பானை  ஸ்டெம்பாக
கிரிக்கெட் ஆடிய சச்சின்கள் ஏராளம்.

பேந்தான்,குழிக்குண்டு,பம்பரமென
பக்கத்து தெரு ஒலிம்பிக்கிற்காக
பயிற்சி எடுத்தவர்கள் ஏராளம்.

பக்கத்து தெரு பஞ்சாயத்து,
அரசியல் ராஜ தந்திரம் மென
அரசியல் படித்தவர்கள் ஏராளம்.

புழுதியும் வெயிலுமாக
தண்ணீரே உணவாக
பொட்டலில் கரைந்த
இளமைக்காலங்கள் ஏராளம்.

ஒவ்வொருமுறை பொட்டலை
கடக்கும் போதும்,அதன் தாக்கம்
இதயத்தின் அடிவரை வருகிறது.
ரோஜாக்களால் ஏற்படாத
தாக்கமும் ,ஏக்கமும் - ஒரு
பொட்டலால் ஏற்படுகிறது.

இப்போது
பொட்டல்கள் கொள்வாரில்லாமல்
அனாதைகளாக கைவிரித்து
காத்துக்கொண்டிருக்கின்றன.
மகாராஜாக்களையும்
சச்சின்களையும்
சந்திக்க.




























Wednesday, March 26, 2014

கதை நேரம் : நாமே புத்தர்கள்

 ஜென் தத்துவமோ அல்லது கோட்பாடோ அல்ல.எல்லா
தத்துவக்குப்பைகளையும் துடைத்தெரிந்து விட்டு விழிப்புணர்வுடன் இயற்கையோடு வாழ்வது தான்.

நாம் எல்லோரும் காலையில் விழிக்கிறோம், மூன்று வேளை சாப்பிடுகிறோம்,இரவில் தூங்குகிறோம்.இவற்றிற்கிடையில் சாப்பாட்டிற்காக உழைக்கிறோம்.ஆனால் இவற்றில் எதையும் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வோடு செய்வதில்லை.

காலையில் கண்விழித்த போது மீண்டும் ஒரு வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லவில்லை.குளிக்கும் போதும் நம் உடலை தொட்டு தழுவி நம்மை சுத்தமாக்கும் தண்ணீருக்கு நன்றி சொல்லவில்லை.
சாப்பிடும் போதும் சாப்பாட்டை வாயில் இட்டு ரசித்து சுவைத்து சாப்பிடுவதும் இல்லை. அதற்காகபாடு பட்டவற்களுக்கு நாம் நன்றி சொல்வதும் இல்லை.இரவிலும் அன்றைய தினம் முழுவதிற்கும் நமக்கு உதவியவர்களுக்கும், நமக்கு வாய்ப்பளித்தவர்களுக்கும் நாம் நன்றி சொல்வதில்லை.என்ன ஒரு நன்றி கெட்ட வாழ்க்கையை வாழுகிறோம்.உண்மையில் ஒரு செக்கு மாட்டைப்போல் வாழ்கிறோம்.

வாழ்க்கையை இனிமையாய் வாழ நாம் என்ன செய்கிறோம் என்ற சின்ன விழிப்புணர்வு போதும்.அப்புறம் வாழ்க்கை இனிக்கத்தொடங்கி விடும்.
ஒரு சின்ன விழிப்பென்னும் தீப்பொறி அறியாமை  காட்டிற்குள் விழும் போது என்ன ஆகும் என்பதை பாரதியார் பாடுகிறார்..

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.


விழிப்பென்னும் சிறு தீப்பொறியை அறியாமை நிரம்பிய மனமென்னும் காட்டிற்குள் வைத்த போது ,மனமென்னும் காடு  எரிந்து சாம்பலாகி,விழிப்பென்னும் உயர் நிலையை அடைகிறது.அப்போது அவர் மனம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என ஆனந்த கூத்தாடுகிறது.

மனதில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம்,சின்ன கீறல் போதும் ஞானம் உதயமாகிவிடும்.அப்புறம் வாழ்க்கையே இனிமையாகிவிடும்.அற்பமெல்லாம் அற்புதமாகிவிடும்.

ஒருவன் பெரிய ஜென் மடாலயத்திற்கு சென்று அங்குள்ள குருவிடம் "நான் புத்தனாக வேண்டும்" என்றான் ஒருவன்.

அவர் உடனே கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.அவனும் அதிர்ச்சியில் கன்னதை தடவிக்கொண்டே அங்கிருந்த தலைமை குருவிடம் "இவர் ரொம்ப மோசம். நான் புத்தனாக வேண்டும் என்றுதானே கேட்டேன்?" இதற்காக ஏன் இப்படி அறைகிறார்? என்றான்.

உடனே தலைமை குரு சொன்னார்.

"அவர் ரொம்ப கருணையானவர். நீ ரொம்ப இளம் வயதுக்காரன் என்பதால் உன்னை அறைவதோடு நிறுத்திக்கொண்டார்.இல்லையென்றால் கத்தியெடுத்து வெட்டி இருப்பார்".

ஏன் என்னை இப்படி கோபப்படுகிறார்? என்றான் வந்தவன்.

அதற்கு குரு சொன்னார் பிறகு "புத்தனாக இருந்து கொண்டே புத்தனாவது எப்படி என்று கேட்டால் யாருக்குதான் கோபம் வராது."

இதையே தான் இந்து மதமும் சொல்கிறது "அயம் ஆத்மா பிரம்மம்  – இந்த ஆத்மாவே பிரம்மம்

நானே புத்தனென்றேன்
ஆனவமாய் ஆகி நின்றேன்.
நாமே புத்தர்களென்றேன் 
புத்தனாய் ஆகிவிட்டேன்.

இன்னொரு கவிதை

வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்

மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும்  ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ  !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !



 
மேலும் படிக்க

சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்? 

கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) 

சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1

 

 


 


  

Tuesday, March 25, 2014

சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?



உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?

 பெண்களைப்பற்றி அறிய முதல் பகுதியை இங்கு சொடுக்கி படித்துவிட்டுவரவும்.

இந்த கேள்வியை கேட்டவர் புகழ் பெற்ற மனோதத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு.ஆனால் அவருக்கே இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.
சரி பெண்களுக்கு உண்மையில் என்ன தான் வேண்டும்.
 
அவர்களுக்கு எல்லாமே தான் வேண்டும்.இதை எப்படி புரிந்து கொள்வது.உதாரணமாக ஒரு பெண் 250 ரூபாய் சேலை எடுக்கப்போனால்.கீழ் சொன்னவாரு அவர்கள் நடந்து கொள்வார்கள்.
  1. எல்லா மாடல்களையும் பொறுமையாக பார்ப்பார்கள்.
  2.  பெரிய பெரிய பூவாக இல்லாமலும் ,வெறும் கட்டம் கட்டமாக இல்லாமலும், நவீன ட்ரண்டாக இருக்க வேண்டும்.
  3. கண்டிப்பாக எளிமையாக இருக்கக்கூடாது.
  4. பட்டிக்காட்டுதனமாக இருக்கக் கூடாது.
  5. அடுத்தவர்கள் பார்த்தவுடன் வாய்பிளக்க வேண்டும்.
  6. யாருமே கட்டாத,யாருமே கற்பனை கூட கண்டிராத ஒரு சேலை

எளிமையாக சொன்னால் ஒரு ஆயிரம் ரூபாய் சேலைக்கு உரிய தகுதி இருக்க வேண்டும்.மேல் சொன்ன அனைத்து விசயங்களும் பெண்களுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்.இப்படிதான் அவர்கள் எல்லா தகுதிகளும் உள்ள ஒரு சிறந்த 250 ரூபாய் சேலையை தேர்ந்தெடுப்பார்கள்.

பெண்களை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

ஏனென்றால் ஒரு பெண்ணுக்கே தான் யார்? தனக்கு என்ன வேண்டும்? என்பது தெரியாது.பிறகு நாம் எப்படி தெரிந்துகொள்வது.

மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொண்டால்.அந்த சேலை எடுக்கும் பெண்ணுக்கே தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம் என்பது தெரியாது.பட்டிக்காட்டுதனமான சேலை என்று ஒரு பாய்ண்ட் சொல்லி இருக்கிறேன் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அதற்கு ஒவ்வொரு அர்த்தம் சொல்லுவாள்.பெண்களை புரிந்து கொண்டு சேலை டிசைன் செய்தால் ஒரு பெண்ணுக்கே சேலை டிசைன் செய்வதில் நம் எல்லோருடைய வாழ்க்கையே முடிந்துவிடும்.ஏனென்றால் அவர்களுக்கே என்ன டிசைன் வேண்டும் என்பது தெரியாது.நாம் டிசைன் செய்து காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் உள்ளுணர்வு அதை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.


 ஏன் ஒவ்வொரு பெண்ணும்  கையில் கைகுட்டை அல்லது பை,தனித்துவமான ஆடை அலங்காராம் செய்கிறார்கள் தெரியுமா?

ஏனென்றால் பெண்களுக்கு அடிப்படையிலே ஒரு பிடிமானமும்,ஒரு தனித்துவ குறியீடும் தேவைப்படுகிறது.உதாரணமாக எல்லா மலர்களும் ஒரே போல் இருந்தால் நமக்கு அதனதன் அழகில் வித்தியாசம் தெரியாது.அது போல் ஒவ்வொரு மலருக்கும் தனித்துவமான அடையாளங்கள் வேண்டும்.  அப்போது தான் வண்டுகள் குறிப்பிட்ட மலரை அடையாளம் காணமுடியும்.இப்படிதான் தான் பெண்களும் தங்களுக்கென ஒரு அடையாள குறி ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.அப்போது தான் ஆண்களால் எளிமையாக அந்த பெண்ணை அடையாளம் காண முடியும்.

பெண்கள் ஏன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?

பெண்கள் இயல்பிலே வெளிப்படுத்தும் தன்னை கொண்டவர்கள்.அது அழகானலும் சரி அழுகையானலும் சரி.மனதில் எதையுமே வைத்துக்கொள்ள விரும்புவது இல்லை.அதை வெளிப்படுத்தியாக வேண்டும்.அதனால் தான் பெண்களுக்கு தங்கள் பேச்சை காது கொடுத்து கேட்கும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்.ஒரு நாள் ஒரு விசயத்தை மனதில் வைத்து வெளிப்படுத்தா விட்டால் பெண்களுக்கு தூக்கமே வராது.உண்மையில் எல்லா ஆண்களும் காதலிக்கும் போது பெண்களின் பேச்சை கேட்பது போல்,பேசிக்கொண்டே இருப்பது போல் நடிக்கிறார்கள்.ஏனென்றால் ஆண்களுக்கு இயற்கையிலே அந்த தன்மை கிடையாது.மேடைப்பேச்சாளர்கள் பாதி பேர் வீட்டில் பேசுவதே இல்லை என்பது தான் உண்மை.பேசிக்கொண்டே இருக்கும் காதல் கல்யாணத்திற்கு பின் நாறிவிடுகிறது என்பதுதான் உண்மை.


இறுதியாக பெண்களுடன் வாழ்வது எப்படி?

இந்த கட்டுரையை நான் எழுத ஆரம்பித்ததே இந்த கேள்விக்காக தான். நாம் எல்லோரும் பெண்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் இல்லை இல்லை புரிந்து கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.ஏன்? நாம் யாரும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.ஒரு சேலை எடுக்க இவ்வளவு நேரமா?மேக்கப் போட இவ்வளவு நேரமா? என கோபித்துக்கொள்கிறோம்.ஆனால் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முயற்சி செய்வதில்லை.உண்மையில் எல்லா பெண்களுக்கும் சில விசயங்களில் ஆலோசகர் தேவைப்படுகிறார்.அவர்களும் கேட்க தயாராகவே இருக்கிறார்கள்.ஆண்கள் மனதில் ஒரு விசயத்தை நினைத்தவுடனே செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.யோசிப்பதில்லை.பெண்கள் பல வழிகளில் யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.செயல்படுவதில்லை.பெண்களிடம் யோசனைகளை கேட்டுக்கொண்டு ஆண்கள் செயல்பட வேண்டும்.இது தான் இயற்கையான வழி.

மற்றொரு முக்கியமான விசயம் பெண்கள் சார்ந்து வாழ்பவர்கள்.அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்,அன்பை அளிக்கும் ஆணை சார்ந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு நல்ல அப்பா, நல்ல அண்ணண், நல்ல நண்பன்,நல்ல காதலன், நல்ல கணவன் என நிறைய  நல்ல விசயங்கள் தேவைப்படுகிறது.இதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி ஏன் கடவுள் பெண்களை மட்டும் இப்படிப்படைத்தான்?

வாழ்க்கையை சுவாரசியமாக்கத்தான்.எல்லாமே புரிந்து விட்டால்,தெரிந்து விட்டால் வாழ்க்கையில் தேடல் நின்றுவிடும்.சுவாராசியம் தீர்ந்துவிடும்.அதனால்தான் கடவுள் தன்னையும் ,பெண்களையும் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு படைத்து விட்டான்.

பெண்களை உற்றுப்பாருங்கள்,கூர்ந்து கவனியுங்கள்,வாழ்க்கையே சுவாரசியமாகி கவிதைபோல் ஆகிவிடும். 

Saturday, March 22, 2014

கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்)



ஒரு ஆத்திகர் இறந்தவுடன் சொர்க்கம் சென்றார்.

கடவுள் ஊர்வலம் நடப்பதால் கொஞ்ச நேரம் ஒரத்தில் நிற்குமாறு கிங்கரர்கள் ஆத்திகரிடம் கூறினார்கள்.அவரும் ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச  நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வெள்ளை சிப்பாவும்,முகத்தில் தாடியும் கொண்ட மனிதனை தங்கள் தோல்களில் சுமந்த படி சென்றனர்.ஆத்திகர் கூட்டத்தை பற்றி கிங்கரர்களிம் கேட்டதற்கு கிறித்தவர்கள் கூட்டம் என கூறினார்கள்.

அந்த கூட்டம் போன பின்பு மற்றொரு கூட்டம் வந்தது. அவர்களும் ஒரு பெரிய மனிதரை தங்கள் தோல்களில் சுமந்து ஆடிக்கொண்டே சென்றனர்.அவர்கள் பற்றி கேட்ட போது இஸ்லாமியர்கள் கூட்டம் என கூறினார்கள்.

அதற்கடுத்தாற் போல் அமைதியாக ஒரு மனிதன் நடந்து போனார்.அவரை பின் பற்றி அமைதியாக ஒரு கூட்டம் சென்றது.அவர்களை பார்த்த உடனே புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என ஆத்திகர் புரிந்து கொண்டார்.

இவ்வாறாக சிறிதும் பெரிதுமாக கூட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.இறுதியில் ஒரே ஒரு வயதான மனிதர் மட்டும் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார்.அவர் பின்னால் எந்த கூட்டமும் இல்லை.

இதைப்பார்த்த ஆத்திகருக்கு ஒரே ஆச்சர்யம்.ஓடிப்போய் அவரிடமே நீங்கள் யார்?உங்களை நான் பூமியில் பார்த்ததே இல்லை என கூறினார்.

அதற்கு அந்த வயதான மனிதர் நான் தான் கடவுள் என்றார்.

========================================================================

"ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்" என்று ஒரு மத போதகர் போதகம் செய்து கொண்டிருந்தார்.இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் பரிசோதிக்க விரும்பினான்.

உடனே போதகர் கன்னத்தில் அறைந்தான்.

உண்மையான போதகர் மறுகன்னத்தையும் காண்பித்தார்.

இந்த முறை அவன் தன் முழு உடல் பலத்தையும் பயன்படுத்தி ஓங்கி மறு கன்னத்திலும் அறைந்தான்.

உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக அடிக்கத்தொடங்கினார்.

வலிதாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.

"என்ன செய்கிறீர்கள்?காலையில்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னதைக் காட்ட சொன்னீர்கள்?"

துறவி சொன்னார் :

"ஆம்.எனக்கு மூன்றாம் கன்னம் இல்லையே; ஏசுவும் மறு கன்னத்தோடு நிறுத்திக்கொண்டார்.அதற்கு பிறகு நான் விரும்பியதை செய்து கொள்ளலாம்.ஏசு இதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை என்றார்".

=======================================================================

 மேலும் படிக்க :


சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி?

 

 

Friday, March 21, 2014

சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1



இந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ  ரசிக்க முடிந்தால்,புரிந்து கொள்ள முடிந்தால் பெண்களையும் ரசிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியும்.

ஆண்களே இல்லாத, பெண்கள் ஆட்சி செய்யும் பெண்களின் உலகம் எவ்வாறு இருக்கும்?அந்த உலகத்தில் சண்டையே இருக்காது.அந்த உலகத்தில் தண்ணி, தம் இருக்காது.சண்டை வந்தால் சண்டையிடுவதற்கு பதிலாக அந்த நாடு எதிரி நாட்டுடன் பேசிக்கொள்ளாது.அந்த உலகத்தில் கொடிய செயலே கில்லுவதும்,அறைவதுமாக இருக்கும்.

ஒரு ஆங்கில படத்தில் ஒரு அருமையான காட்சி ஒன்று பார்த்தேன்.அது பெண்களின் உலகத்தை , மனதை அருமையாக படம் பிடித்துக்காட்டியது.
படத்தின் கதானாயகன் ஒரு சீன குங்பு மாஸ்டர்.ஜப்பானியர்கள்  இந்த குங்பு மாஸ்டரை கொல்ல நினைக்கிறார்கள்.தன்னையும் தன் குடும்பத்தையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மனைவியின் வற்புறுத்துதலால் நாட்டைவிட்டே போக முயற்சி செய்கிறான்.அந்த காட்சியில் கதா நாயகன் சொல்லுவான் "நான் எவ்வளவு பெரிய குங்பு மாஸ்டர்!இருந்தும் என்னால் இந்த நாட்டுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.நான் கோழை போல் நாட்டைவிட்டு போக போகிறேன்." அதற்கு அவன் மனைவி சொல்லுவாள்.
"எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.நீங்கள்,நான் நம் மகன் மூவரும் உயிரோடு இருக்கிறோம்."அது போதும் என்பாள்.

உண்மையில் ஆண்கள் அறிவுப்பூர்வமானவர்கள்.பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள்.ஒரு ஆணுக்கு பித்தாகரஸ் தியரம் அவசியமாக இருக்கலாம்.ஆனால் பெண்ணுக்கு தானும் தன் குடும்பமும் மிக முக்கியம்.உண்மையில் பெண்கள் தான் உலகத்தையே உறவு பாலங்களாக பின்னி பேணிக்காப்பவர்கள் பெண்கள்.

ஒரு ஆணை திட்டிவிட்டால் பத்து நிமிடத்தில் போடா போ என தன் வேலையை பார்க்கப்போய்விடுவான்.ஆனால் பெண்ணோ இடிந்து போய்விடுவாள்.அதிலிருந்து மீள நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

எந்த டீக்கடையிலாவது பெண்கள் அமர்ந்து அரசியல் பேசியது உண்டா?
இல்லை.

ஏனென்றால் ஆண்கள் புறத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் வீட்டைத்தாண்டி சமூகம்,அரசியல் என புறத்தன்மைவாய்ந்த விசயங்கள் வேண்டும்,
பெண்கள் அகத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் அழகு,தங்கள் கவுரவம்,தங்கள் பிள்ளை என தங்களை பற்றிய அல்லது தங்களை சுற்றி உள்ளவர்கள் பற்றிய விசயம் மிக அவசியம்.ஒரு பெண்ணுக்கு மன்மோகன்சிங்கை விட அன்று நாதஸ்வரம் சீரியலில் என்ன நடந்தது என்பது முக்கியம்.

ஆண்கள் உடல் வலிமையானவர்கள்.அதனால் தான் ஆண்கள் ஆட்சி செய்யும் இந்த உலகம் இத்தனை வன்முறைத்தனமாக இருக்கிறது.பெண்கள் மன வலிமையானவர்கள்.பெண்களின் உடம்பே அதிக பட்ச வலிகளை தாங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதனால் தான் பிரசவம் போன்ற விசயங்களை இலகுவாக தாண்டிவிடுவார்கள்.அது மட்டும் இல்லாமல் ஒரு செயலை எடுத்துவிட்டால் செய்யாமல் விட மாட்டார்கள்.

ஒரு பெண்ணால் தன் எதிரே நிற்பவர்களின் உடல் மொழிகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பொய் சொல்லுகிறான் என்றால் அந்த பெண்ணால் அவன் பொய் சொல்லுகிறான்,என்பதை ஆணின் உடல் மொழியால் அறிந்து கொள்ளமுடியும்.

ஒரு பெண்ணிற்கு சமுதாயத்தின் மீதும் அதன் கட்டுப்பாடுகளின் மீது எந்த அக்கரையும் இல்லை.அவள் நினைத்தால் அத்தனைக்கட்டுப்பாடுகளையும் எளிதாக உடைத்து தாண்டிவிடுவாள்.

ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண் நண்பர்கள் இருக்க முடியும்.ஆனால் ஒரு ஆணுக்கு இரண்டு பெண் நண்பர்கள் இருந்தால் அவன் செத்தான்.

பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு உலகம்.அவர்களுக்கென பிடித்தமான விசயங்கள்,செயல்பாடுகள்,கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்ணிற்கு பெண் வேறுபடும்.

தன்னை மதிக்கும்,தன்னை காக்கும்,தன் மேல் அன்பைப்பொழியும் ஆண்களையே பெண்களுக்கு பிடிக்கும்.ஒரு ஆண் வலிமையற்றவனாய்,அன்பில்லாதவனாய் இருந்தாள்.உடனே அவனை விட்டு விலக ஆரம்பிப்பாள்.

பெண்களுக்கு உள்ளுணர்வு தன்மை அதிகம்.அதனால் அவர்கள் எதிரிகள் அருகில் வரும் போதே முறைக்க அல்லது எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரு ஆண் துரோகங்களையும்,அவமானங்களையும் எளிதாக மறந்து விடுவான்.ஆனால் ஒரு பெண் துரோகங்களை,அவமானங்களையும் மறக்கவும் மாட்டாள்.மன்னிக்கவும் மாட்டாள்.


தொடரும்............

மேலும் வாசிக்க

திகில் கதை : வேண்டாத வேலை 

சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா

 

 

 

Thursday, March 20, 2014

திகில் கதை : வேண்டாத வேலை


நள்ளிரவில் ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர்.அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று பீரோல் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை தேடினார்கள்.

இறுதியாக இருவரும் பீரோல் இருக்கும் அறையை அடைந்தனர்.முதலாவது திருடன் பீரோலை திறந்து பார்த்தவுடன் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.அலறலைக் கேட்ட இரண்டாவது திருடனும் பீரோல் அருகில் வந்து சுற்றி முன்னும் பின்னும் பார்த்தான். திடீரென அவனும் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.

சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது திருடர்கள் இருவரும் வாயில் நுரையுடன் சுருண்டு கிடந்தனர்.

வீட்டில் உள்ளவர்கள் உடனே போலிஸுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார்கள்.போலிஸ் வந்து இருவரையும் ஆம்புலன்ஸில்  ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் ஏன் அலறினார்கள்?
எதனால் இருவரும் மயங்கி விழுந்தார்கள்?
என போலிஸுக்கு ஒன்றுமே புரியவில்லை.
வீட்டில் உள்ளவர்களை கேட்ட போதும் தங்களுக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் சொல்லிவிட்டார்கள்.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த வீடு முழுவதையும் மீண்டும் பரிசோதிக்க ஆரம்பித்தார்.குறிப்பாக அந்த பீரோல் இருக்கும் அறையை கூர்ந்து பரிசோதிக்க ஆரம்பித்தார்.ஆனால் அங்கு எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

பிறகு அந்த அறையைவிட்டு அதற்குமுன் இருந்த சமையல் அறையை பரிசோதிக்க ஆரம்பித்தார்.சமையல் அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது.ஆனால் அந்த அறையில் இருந்த ஒரு மேஜையின் மீது வெற்று தட்டு இருப்பதை தற்செயலாக பார்த்தார் .அதன் ஓரங்களில் ஏதோ இனிப்பு பொருள் ஒட்டி இருப்பதை பார்த்தார்.

உடனே வீட்டில் உள்ளவர்களிடம் தட்டைப்பற்றி விசாரித்தார்.அதற்கு வீட்டில் உள்ளவர்கள் "வீட்டில் எலித்தொல்லை அதிகம் இருப்பதால் எலியை கொல்ல சுவீட்டிற்குள் எலி மாத்திரை வைத்துவிட்டு தூங்குவது தங்கள் வீட்டில் வழக்கம் என் கூறினார்கள்."

இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் புரிந்து விட்டதால் கிளம்ப ஆரம்பித்தார்.ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியாததால் இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என கேட்டனர்?

அதற்கு அவர் திருடர்கள் முதலில் சமையல் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.எலி மருந்து கலந்த சுவீட்டை சாப்பிட்டுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்து பீரோலை திறக்க ஆரம்பிக்கும் போது எலி மருந்து தன் வேலையை காட்டிவிட்டது.திருடர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்றார்.


மேலும் வாசிக்க:

கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்
கதைநேரம் : ஆசை
 

Wednesday, March 19, 2014

சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா


எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு.நானும் கல்யாணம் ஆன புதுசுல ஊட்டிக்கு போலாம்னு பிளான் பன்னி இருந்தப்ப எங்க வீட்டுல விடல.அதுக்கப்பறம் குழந்தை , வேலைனு டூர் பத்தி நினைக்கறதுக்கே நேரம் இல்லாம போச்சு,சரி இந்தவாட்டி கொடக்கானல் போலாம்னு ஒரு சின்ன பிளான்  பன்னினேன்.பிளான் இது தான்.எனக்கு சனி,ஞாயிறு வார விடுமுறை.அதனால் வெள்ளிக்கிழமை மதியம் மூணு மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி ஏழு மணிக்குள்ள கொடைக்கானல் போய் சேரனும்.அங்க போய் ரூமும் வாடகை காரும் பிடிச்சு சனி ஞாயிறு இரண்டு நாள் ரிலாக்ஸா கொடைக்கானல என்ஜாய் பன்னனும்.ஆனா என் பிளான் எப்படியெல்லாம் சொதப்பி, நான் என்ன அனுபவிச்சேன் என்பது தான் இந்த கட்டுரை.

என்னுடைய பிளான்படி சரியா மாலை 3.30க்கு நான் , என் மனைவி ஒரு வயது மகள் மூவரும் ஆரப்பாளையம் பஸ்டாண்டிற்கு ஆட்டோவில் போய் சேர்ந்தோம்.அங்கே போய் விசாரித்த பிறகுதான் தெரிந்தது அங்கிருந்து கொடைக்கானலுக்கு நேர் வண்டி 5.20க்கு என்று.சரி அங்கிருந்து வத்தலகுண்டு சென்றால் கொடைகானலுக்கு வேகமாக போய்விடலாம் என்று அங்கிருந்து டீகடைக்காரர் சொன்னதால் நேராக வத்தலகுண்டு சென்றோம்.ஆனால் வத்தல்குண்டிலும் இதே நிலைமைதான்.அங்கிருந்தும் கொடைக்கானலுக்கு அடிக்கடி பஸ் இல்லை.வத்தலகுண்டில் பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் ஒரு வண்டி வந்தது.அந்த வண்டியில் நிற்ககூட இடமில்லை.ஆனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் அந்த வண்டியில் ஏறினோம்.

ஏறி பதினைந்தாவது நிமிடத்தில் என் மகள் அழ ஆரம்பித்தாள்.நானும் என் மனைவியும் நின்று கொண்டே என் மகளை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தோம்.ஆனால் அவளோ பஸ்ஸே ரெண்டாகும் அளவுக்கு கத்த ஆரம்பித்தாள்.தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி தன் பையில் இருந்த ஒரு சாக்லேட்டை என் மகள் கையில் கொடுத்தாள்.என்மகளும் சாக்லேட் தின்னும் ஆசையில் சமாதானமானாள்.ஆனால் எல்லாம் ஐந்து நிமிடம் தான்.மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

இதைப்பார்த்து என் மனைவி நின்று கொண்டிருந்த சீட் அருகில் இருந்த பெண்மணி கருணையோடு தன் சீட்டை என் மனைவிக்கு கொடுத்தார்.ஆனாலும் என் மகள் அழுகையை நிறுத்தவில்லை.வேறு வழி இல்லாமல் என் பையில் இருந்த டேப்லட் கணிணியை இயக்க ஆரம்பித்தாள் என் மனைவி.உடனே என் மகள் அழுகையை நிறுத்திவிட்டாள்.இதற்குள் பஸ் மலைப்பகுதியின் கால்வாசி தூரத்தை கடந்திருந்தது.திடீரென ஒரு வளைவில் பஸ் நின்றுவிட்டது.பஸ் முழுவதும் புகையால் நிரம்ப ஆரம்பித்தது.எல்லோரும் பஸ்ஸில் இருந்து வேகமாக இறங்கி சாலையில் நின்றோம்.இனி பஸ் நகராது என டிரைவர் சொல்லிவிட்டு மாற்று வண்டிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நானும் என் மனைவியும் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம்.என் மகளும் குளிரில் அழ ஆரம்பித்தாள்.ஆனால் அவளை சாமாதானம் செய்ய முடியாமல் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.அருகில் இருந்தவர்கள் போகும் வண்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏற ஆரம்பித்தார்கள்.பத்து நிமிட காத்திருப்புக்கு பின் தூரத்தில் ஒரு வேன் வந்து நின்றது.அது கல்லூரி மாணவிகளை ஏற்றிவரும் வேன் என்பதால் எங்களை  ஏற்ற மறுத்தார்கள்.ஆனால்கையில் குழந்தையுடன் கொட்டும் பனியில் நிற்பதை பார்த்து எங்களை ஏற்றிக்கொண்டார்கள்.என் மகளும் வேனில் ஏறியவுடன் அழுகையை நிறுத்திவிட்டாள். நான் டிரைவர் சீட் அருகிலும் என் மனைவி உள்ளே மாணவிகளுடன் போய் அமர்ந்து கொண்டாள்.

வண்டி மெதுவாக கொடைக்கானலை நெருங்கும் போது டிரைவர் என்னிடம் எங்கு இறங்க வேண்டும் என்றார்?நான் பஸ்டாண்ட் என்றேன். நீங்கள் ரூம் எடுத்துவிட்டீர்களா? என்றார். நான் இல்லை என்றேன்.உடனே அவர் ஒரு கார்டை என்னிடம்  காட்டி தாங்கள் லோக்கல் கொடைக்கானல் டிரைவர்கள் என்றும் ரூம் மற்றும் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்பவர்கள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.அது மட்டுமில்லாமல் கொடைக்கானலில் ஏமாற்றுபவர்கள் அதிகம் என்பதால் தாங்களே ரூம் ஏற்பாடு செய்யலாமா, என  கேட்டார்கள்?  நானும் சரி என தலையசைத்தேன்.உடனே கிளினர் யாருக்கோ போன் செய்து வரச்சொன்னார்.

வண்டி கொடைக்கானலை அடைந்ததும் அங்கே ஒருவர் எங்களுக்காக காருடன் காத்துக்கொண்டிருந்தார். நாங்கள் காரில் ஏறி பஸ்டாண்டில் இருக்கும் அவருடைய ஏஜன்ஸிற்கு சென்றோம்.அங்கே எந்த மாதிரி ரூம் வேண்டும் என்றார்.நான் சிங்கிள் பெட் உள்ள ரூம் வேண்டும் என்றேன்.அவர் தன் மேஜையின் மீது இருந்த அந்த ரூமின் போட்டோவை காட்டி இது ஓகேவா என் கேட்டார்?நானும் என் மனைவியும் ஓகே என்றோம்.அங்கிருந்து ஓட்டலுக்கு வந்த காரிலே சென்றோம்.ஓட்டலுக்கு சென்று பார்த்தால் எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் எங்களுக்கு போட்டோவில் காட்டிய அறைக்கும் நாங்கள் நேரில் பார்க்கும் அறைக்கும் சம்பந்தமே இல்லை.நாங்கள் ஏமாற்றப்பட்டதை நொந்து கொண்டு வேறு வழி இல்லாமல் அதே அறையில் தங்கினோம்.

 மறுநாள் காலையில் மீண்டும் அந்த ஹோட்டலின் ஓனர் எங்களை வந்து சந்தித்தார்.சுற்றிப்பார்க்க கார் அல்லது வேனை ஏற்பாடு செய்யட்டுமா என கேட்டார்? நான் யோசித்துக்கொண்டே நின்றேன்.உடனே தன் சட்டை பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து என்னிடம் நீட்டினார்.அதில் எந்ததெந்த இடங்களை எல்லாம் சுற்றி காட்டுவார்கள் என ஒரு லிஸ்ட் இருந்தது.அதுவும் தலைக்கு150,200,350 என பணத்தின் அடிப்படையில் மூன்று வகையாக இருந்தது. நானும் என் மனைவியும் 350 ரூபாய் வகையை தேர்ந்தெடுத்தோம்.அவர் அங்களிடம் பணத்தை வாங்கிவிட்டு வண்டி பத்து மணிக்கு வரும் என்றார்.நாங்களும் வேகமாக சாப்பிட்டுவிட்டு ரிசப்சனில் பத்து மணிக்கு காத்திருந்தோம்.மணி 10.30 ஆகியும் வண்டி வரவே இல்லை.போன் பன்னி கேட்டதற்கு பாரஸ்ட் ட்ரிப் என்பதால் காட்டிலகா அதிகாரிகளின் அனுமதி சீட்டிற்காக காத்திருப்பதாக சொன்னார்கள்.மூன்று முறை போன் செய்த பின்பு 11.30 ஒரு வேன் வந்து சேர்ந்தது.அதற்குள் ஒரு கைடு,டிரைவர் மேலும் எங்களைப்போல ட்ரிப் கேட்டிருந்தவர்களும் இருந்தார்கள்.

வண்டி சரியாக இரண்டு வளைவுகள் பயணம் செய்து ஒரு ஓரம் போய் நின்றது.அந்த இடம் தான்  கோக்கர்ஸ்வாக் எனவும் ,எதிரே இருப்பது பூங்கா எனவும் அதனதன் வரலாறை ஒரு நிமிடம்கூறி எல்லோரும் இரண்டையும் சுற்றி பார்த்துவிட்டு சரியாக ஒரு மணிக்கு வண்டி நிற்கும் இடத்திற்கு வருமாறு கூறினார்கள்.அந்த இரண்டு இடங்களுமே நாங்கள் இருந்த ஹோட்டலின் அருகில்தான் இருந்தது .நாங்கள் மறுபடியும் நொந்து கொண்டு இரண்டு இடங்களைசுற்றி பார்த்துவிட்டு வேன் நிற்கும் இடத்திற்கு வந்தோம்.அங்கிருந்து வேன் வேகமாக மலைக்காட்டிற்குள் பயணம் செய்ய ஆரம்பித்தது.போகும் வழியில் வண்டியில் இருந்தவாரே எல்லா இடங்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.பேருக்கு இரண்டே இடங்களில் இறக்கிவிட்டார்கள்.மதியம் உணவிற்கு மலை உச்சியில் தனியாக இருந்த ஒரு கடையில் இறக்கிவிட்டார்கள்.அங்கு சாப்பாடு மட்டும் இருந்தது.பொறியல் காலியாகியிருந்தது.ஆனால் விலையோ அறுபது ரூபாய்.என்ன சொல்ல வேறுவழியில்லாமல் சாப்பிட்டோம்.

அங்கிருந்து மறுபடியும் வேனில் புறப்பட்டு சரியாக நான்கு இடங்களை வேனில் இருந்தவாறே காட்டினார்கள்.பேருக்கு குணாக்குகையில் மட்டும்
இறக்கிவிட்டார்கள்.கடைசியில் எங்களை ஏரி கரையில் இறக்கிவிட்டு தலைக்கு ஐம்பது எக்ஸ்ட்ரா ஜார்ஜ் வாங்கிக்கொண்டார்கள்.கேட்டதற்கு டிரைவர்,கிளினர் சம்பளம் என்றார்கள்.உண்மையில் ஒரு மணி நேர வேன் பயணம் இதற்கு தலைக்கு இவர்கள் வாங்கிய பணம் 400.நாங்கள் உண்மையில் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.மறுநாள் காலை நாங்கள் எந்த ட்ரிப்பும் ஏற்பாடு செய்யாமல் நாங்களே நடந்து பார்க்,ஏரி என சுற்றிப்பார்த்து கொடைக்கானலில் இருந்து கீழே இறங்கினோம்.

உண்மையில் மொத்த கொடைக்கானல் டூரிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதுதான் உண்மை.இதற்கு நான் செய்த முட்டாள்தனமான பிளான்தான் காரணம்.ஆனால் என் மனதை உறுத்துவது ஒன்றேதான்.மனிதன் சகமனிதனை ஏமாற்றிவாழும் அந்த வாழ்க்கைதான்.பத்து ரூபாய்க்கு எத்தனை பொய் எத்தனை புரட்டு.தங்களை நம்பிவந்தவர்களை முதுகில் குத்தும் கூட்டத்தை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன்.ஆனாலும் இவ்வளவு கெட்ட மனிதர்கள் நடுவிலும் நிறைய நல்ல மனிதர்களையும் சந்தித்தேன்.

கொட்டும் பனியில் மலை ரோட்டில் கையில் குழந்தையுடன் லிப்ட் கேட்கும் போது வண்டியை நிறுத்தி இடம் கொடுத்த வேன் டிரைவர்.என் மகளுக்காக தான் உட்கார்ந்திருந்த இடத்தை கொடுத்த அந்த பெண்.அவ்வளவு பேருந்து கூட்டத்திற்கு நடுவிலும் என் மகளின் அழுகையை சமாதானப்படுத்த தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்துக்கொடுத்த கல்லூரி மாணவி என் நிறைய நல்ல மனங்களையும் சந்தித்தேன்.


மகாபாரத்தில் துரியோதனன் தலைமையிலான கெளரவர்கள் படை எல்லாவிதத்திலும் பெரியதாகவும், திறமையானவர்களை கொண்டதாகவும் இருந்தாலும்,ஏன் போர் சொல்லிக்கொடுத்த குருதேவரே அவன் பக்கம் இருந்தும் ஏன் தோற்றார்கள் என ஓசோவிடம் ஒரு கேள்விகேட்கப்பட்டது?

அதற்கு அவர் ஒரு மனிதன் ஒரு செயலை செய்யவோ அல்லது இலக்கையோ  அடையவோ திட்டமிடும் போது  இது இப்படிதான் நடக்கும் மிகுந்த நம்பிக்கை கொள்கிறான்.ஆனால் கண்ணுக்கு புலனாக சக்திகள் அதில் செயல்பட ஆரம்பிக்கும் போது எல்லாம் தலைகீழ் ஆகிவிடுகிறது.நினைப்பதொன்று நடப்பதொன்றாகி விடிகிறது.துரியோதனனும் தன் முழு திறமையுடன் திறமையான ஆட்களை தன் படையில் இணைத்து வெற்றி பெருவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டான்.ஆனால் கடவுள் கண்ணண் ரூபத்தில் வந்து எல்லாவற்றையும் மாற்றிப்போட்டுவிட்டார்.எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.தோற்கவேண்டியவன் ஜெய்த்துவிட்டான்,ஜெயிக்க வேண்டியவன் தோற்றுவிட்டான்.

உண்மையில் கொடைக்கானல் கிளம்பும்முன் இன்பச்சுற்றுலா என நினைத்தேன்.ஆனால் அதுவே துன்ப சுற்றுலாவாக மாறி  நல்ல அனுபவத்தை கொடுத்தது என்பதுதான் உண்மை.

மேலும் வாசிக்க

சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்




Friday, March 14, 2014

கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்



ஒரு பேராசிரியர் உடற்கூறு வகுப்பில் "உணர்ச்சி தீண்டுதலில் பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு  எது என்று?" ஒரு மாணவியிடம் கேட்டார்.

உடனே அந்த மாணவி நாணத்துடன் "இதற்கு நான் பதில் கூறமாட்டேன் என்றாள்".

அந்த பேராசிரியர் அருகில் இருந்த மாணவனை கேட்டார்.

அவன் "கண்ணின் கருவிழி" என்றான்.

பேராசிரியர் மாணவியை பார்த்து கூறினார்.

உனது குழப்பம் மூன்று விசயங்களை காட்டுகிறது.ஒன்று "நீ பாடங்களை சரியாக படிப்பதில்லை".இரண்டு "உன் மனம் அழுக்கானது".மூன்று "நீ மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாவாய்".


----------------------------------------------------------------&&---------------------------------------------------


தன்னுடைய 70 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட விரும்பிய அந்த முதியவர் மருத்துவமனைக்கு வந்தார்.

டாக்டரை அணுகி "டாக்டர், இன்று இரவு ஒரு பெண்ணுடன் தங்கப்போகிறேன்.அவளிடம் ஒரு இளைஞனைப்போல் நடந்து கொள்ள விரும்புகிறேன்.ஏதாவது மருந்து கொடுங்கள்" என்றார்.

அவரது ஆசையை கண்டு அனுதாபப்பட்டு டாக்டரும் சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.

நடு இரவில் அந்த டாக்டர் ஆர்வத்தை கட்டுப்படுத்தமுடியாம ல் அந்த முதியவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார்: "என்னுடைய மாத்திரைகள் ஏதும் வேலை செய்ததா?"

"ஆகா! பிரமாதம்! இதுவரை எழு தடவை ஆகிவிட்டது!"என்று உற்சாகமாக கூறினார் முதியவர்.

"அப்படியா! ரொம்ப சந்தோசம்! ஆமாம், அந்த பெண் எப்படி இருக்கிறாள்?" என்றார் டாக்டர்?

அந்த பெண்ணா? அவள் இன்னும் இங்கு வரவில்லையே. என்றார் முதியவர்.


-------------------------------------------------------------&&---------------------------------------------------------

மேலே சொல்லப்பட்ட கதைகள் மனம் காட்டும் கண்ணாடிகள். நீங்கள் இந்த கதைகளை படிக்கும் போது ஆழமாக உங்கள் மனங்களை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை திட்ட நினைத்தால் அதற்கு நீங்கள் கொண்ட தவறான புரிதலாக கூட இருக்கலாம். நீங்கள் சிரித்துக்கொண்டால் நானும் சிரித்துக்கொள்வேன்.ஏனென்றால் நாம் இருவரும் சரியான புரிதல் உள்ளவர்களாக இருக்கலாம்.


மேலும் கதைகளுக்கு படியுங்கள்.

  1. ஆசை 
  2. வாயால் வந்த வினை


Thursday, March 13, 2014

சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்


இன்றைய சூழலில் பல ஆயிரம் கோடி லாபம் தரும் தொழில் எது என்றால் அது உடல் எடையை குறைக்கும் கருவிகளை,மாத்திரைகளை தயாரிக்கும் தொழில் தான்.ஏனென்றால்  மேற்கில் மூன்றில் ஒரு பங்கு ஆணும்,பெண்ணும் அதிக எடையுடன்(overweight) இருப்பதாக ஒர் ஆராய்ச்சி சொல்கிறது.அதுமட்டுமில்லாமல் இயல்பான எடையில் இருப்பவர்கள் கூட மனதளவில் தாங்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.

 குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தாங்கள் அதிக எடையில் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.டாக்டர் ஜெப்ரி என்பவர் இரண்டாயிரம் பேரிடம் எடுத்த  ஒரு சர்வேயில் 72 சதவீதம் பெண்கள்  உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி(diet) கிடப்பதாகவும் ,44 சதவீத ஆண்கள் இயல்பான எடையில் இருப்பதாகவும் கூறிவுள்ளார்.

பட்டினி இருப்பது இன்று ஒரு நாகரீகமாகிவிட்டது.உண்மையில் இது நீண்டகாலம் நீடிக்காமல் மனஅழுத்தத்தில் கொண்டுபோய்விடுகிறது.இதில் வேதனை தரும் விஷயம் பதினைந்து வயதிற்குட்பட்ட மூன்றில் ஒரு பள்ளி குழந்தை உடல் எடையை காக்கிறேன் என்று பட்டினி கிடக்கிறது.

நான் குண்டாக(Obesity) இருக்கிறேன்.அதிக எடையில் அசிங்கமாக இருக்கிறேன்,இது போன்ற மன அழுத்தங்கள் தோன்றி பட்டினி கிடந்து,மருந்து சாப்பிட்டு வாழ்வை சீரழிக்கின்றன.உண்மையில் மன அழுத்தம் உள்ளவர்கள் தான் அதிகமாக உண்டு உடல் எடையினால் அவதிப்படுகிறார்கள்.

இவற்றில் இருந்து வெளியேறி ஆரோக்கியமான உடல் எடையை எப்படி தக்கவைப்பது?

  • நாம் எல்லா விசயத்தையும் முதலில் மனதளவில் புரிதளோடு தொடங்க வேண்டும்.
  •  முதலில் நாம் அதிக எடையுடன் இருக்கிறோம் என்ற மன அழுத்தத்தில் இருந்து வெளியேருங்கள்.இதை எப்படி செய்வது?
  • உங்கள் எடை கூடியதற்கு நீங்கள் நீண்டகாலம் மேற்கொண்ட தவறான உணவு பழக்கவழக்கம் தான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். 
  • அதே போல் உடல் எடைகுறையவும் நீண்டகாலம் ஆகும் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
  • உடலின் செயல்முறைகளை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.உண்மையில் நம் உடல் ஓர் அற்புதம் என்பதை உணருங்கள்.
  • நாம் பட்டினி கிடக்கும் போதோ அல்லது பத்தியம் இருக்கும் போதோ உடல் இயங்க தேவையான ஆற்றல் குறைந்து உடல் தன் இயக்கத்தை மெதுவாக்குகிறது,இது கொழுப்பை கரைக்கும் செயலையும் மெதுவாக்குகிறது. நீங்கள் நன்றாக சாப்பிடும் போது கொழுப்பை கரைக்கும் உடலின் செயல் துரிதமாகிறது.எனவே நன்றாக சாப்பிடுங்கள்.
  • அறிவியல்ஆய்வுகள் சொல்கின்றன வருடத்திற்கு ஒரு மனிதன் அதிகபட்சமாக ஆறுகிலோ வரைக்கும் குறைக்கலாம் என்று. நீங்களோ உங்கள் நண்பரோ ஆறுகிலோவை ஒரு மாதத்தில் குறைத்தால் பக்கவிளைவுகள் நிச்சயம்.அடுத்தடுத்த மாதத்தில் மீண்டும் உடல் எடை வேகமாக கூட ஆரம்பிக்கும்
  • எந்த மருந்தும் உடல் எடையை நீண்ட நாள் குறைத்து தக்கவைக்க முடியாது என்பதை உணருங்கள்.
  • இரவில் கொழுப்பு உணவை தவிர்த்து விடுங்கள்.ஏனென்றால் இரவில் உடல் தன் இயக்கத்தை குறைத்து உணவை கொழுப்பாக மாற்றுகிறது.
  • நீண்ட காலம் கடைபிடிக்க முடிந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.உதாரணமாக காலையில் ஐந்து இட்லி,மதியம் இரண்டு கப் உணவு,இரவு ஒரு கப் உணவு அல்லது இரண்டு சப்பாத்தி என்று உடல் உழைப்பிற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • சிலர் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்வதால் உடலுக்கு போதிய ஆற்றல் இல்லாமல் உடனே பசி ஏற்படுகிறது.
  • தண்ணீர் அதிகம் குடியுங்கள்.ஏனென்றால் தண்ணீர் அதிகம் குடிக்காமல் பசிக்கும் தாகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது.
  • உணவை பற்றியும்,உடல் எடை பற்றியும் அதிகம் சிந்திப்பதை நிறுத்துங்கள்.
  • உணவை மெதுவாகவும்,அணுஅணுவாகவும் ரசித்து சாப்பிடுங்கள்.
  • ஒரு நாள் அதிகம் சாப்பிட்டுவிட்டால் கவலைப்படுவதை விட்டு அடுத்த நாள் இரண்டி நிமிடம் அதிகம் உடற்பயிற்சி செய்து குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
  • யோகா,தியானம் போன்ற நல்ல விசயங்களில் கவனம் செலுத்துங்கள்.
  • இறுதியாக உடல் எடை குறையாவிட்டால் உங்களை நினைத்து கவலைப்படுவதை விட்டு, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
 மேலும் வாசிக்க

http://www.fatmatters.com/top-10-dieting-mistakes/
http://www.fatmatters.com/tag/psychology-of-dieting/
http://www.fatmatters.com/how-to-stay-committed-to-losing-weight/


Wednesday, March 12, 2014

கதைநேரம் : ஆசை



இந்த உலகமே ஆசை என்னும் சக்கரத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த உலகத்தில் ஆசை இல்லாத மனிதனே இல்லை.எல்லோருக்கும் அவர் அவர்களின் வசதியை பொருத்து ஆசை இருக்கிறது.ஆனால் ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொல்கிறார்.அப்போ ஆசைபடுவது தவறா?

இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை பற்றிய கொஞ்சம் புரிதல் வேண்டும்.ஆசை என்பது என்ன?

ஆசை என்பது நம் மனதை திருப்திபடுத்தும் பொருளை அடைவது அல்லது செயலை செய்வது.ஒரு கார் அழகாக இருக்கிறது என்பதால் அதன் மீது ஆசைபடலாம் அல்லது அது நம்மிடம் இருந்தால்தான் நாம் சமுதாயத்தில் பெரிய மனிதனாக தெரிவோம் என்ற கெளரவத்திற்காக ஆசைபடலாம்.இது மட்டுமா.நாம் ஆசைபட்ட பொருளின் மீது நம் உடல்  பொருள் ஆன்மா என் எல்லாவற்றையும் வைத்து விடுகிறோம்.

உண்மையில் மனிதன் தன் ஆன்மாவையும் உயிரையும் புறப்பொருளின் மீது வைக்க  நினைப்பதுதான் ஆசைக்கு உண்மையான அர்த்தம்.

சரி ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்?

ஆசை வந்தவுடன் நாம் கனவுகான ஆரம்பிக்கிறோம்.அவை செயல்களாக மாற ஆரம்பிக்கின்றன.ஆசை நிறைவேறிய பின் ஆசைபட்ட பொருளின் மீதான ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது.இதற்காகவா இவ்வளவு போராடினோம் என குற்ற உணர்வு ஆரம்பிக்கும்.

சில நேரம் ஆசையை நிறைவேற்ற தவறான செயல்களை செய்ய ஆரம்பித்து வாழ்க்கையையே தொலைத்துவிடுகிறோம்.சில ஆசைகளினால் வாழ்க்கையை இயல்பாக வாழமுடியாமல் இயந்திரமாக வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.

உண்மையில் ஒரு ஆசையின் பின் மற்றொரு ஆசை என ஒன்றன் பின் ஒன்றாக நம் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆசையின் காரணமாக கடனாளியாக,குற்றவாளியாக, இயல்பு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். ஆசை ஆசையாக காதலித்து வாழ்க்கையை தொலைத்தவர்கள்தான் இங்கு அதிகம்.

உண்மையில் ஆசை நம் இயல்பு வாழ்க்கை தின்று விடுகிறது.இதற்கு அருமையான கதை ஒன்று சொல்வார்கள்.

ஒருத்தர் அருமையான கார் ஒன்றை வாங்க ஆசைபட்டார்.அதற்காக குடும்பம் பிள்ளைகள் என அனைத்தையும் மறந்து கடினமாக வேலை செய்தார்.இறுதியாக அவர் அந்த காரை வாங்கி தன் வீட்டின் முன் நிறுத்தி நிம்மதி பெரு மூச்சு விட்டுக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில் எழுந்து தன் காரை பார்க்க வந்த போது அவருடைய மகள் அந்த புது காரின் மேல் கல்லால் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அதை பார்த்த அவருக்கு தன் உயிரின் மேல் கிறுக்குவது போல் இருந்தது.ஆத்திரத்தில் அருகில் இருந்த குச்சியை எடுத்து மகளின் கைகளின் மேல் ஆத்திரம் தீர அடித்தார். இந்த செயலால் மகளின் கையே செயல் இழந்து போனது.மீண்டும் கை செயல்படாது மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள்.

அவர் மிக கவலையுடன் தன் வீட்டின் முன் அமர்ந்து அந்த காரை பார்த்துக் கொண்டிருந்தார்.தற்செயலாக மகள் கிறுக்கிய பகுதியை உற்று பார்க்கும் போது அது ஏதோ எழுத்துபோல் இருந்தது.ஓடி போய் அருகில் நின்று பார்த்தார்.

அதில் I love you dad என எழுதி இருந்தது.அவர் நொடிந்து போய்விட்டார்.

இதை தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொன்னார்.ஆசை ஏதாவது ஒரு வகையில் துன்பத்தில் போய் முடிகிறது.ஆசைபடாமல் எப்படி வாழ்வது என நீங்கள் கேட்கலாம்.

வாழ்க்கையை இரண்டு வகைகளில் வாழலாம்.ஒன்று தேர்ந்தெடுப்பது(choice) மற்றொன்று முக்கியத்துவம் அளிப்பது(preference).எப்போதும் முக்கியத்துவமளித்து வாழுங்கள்.தேர்ந்தெடுத்து வாழாதீர்கள்.

அப்படி தேர்ந்தெடுக்கும் போது உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.தேர்ந்தெடுத்த பொருள் இல்லாமல் உங்களால் வாழமுடியாதா?அதன் மேல் உயிரையே வைத்திருக்கிறீர்களா?இரண்டுக்கும் ஆமாம் என்றால் நீங்கள்  ஆசைபடுகிறீர்கள் என்று அர்த்தம்.அது உங்களுக்கு தேவையில்லை.