ஒரு ஆத்திகர் இறந்தவுடன் சொர்க்கம் சென்றார்.
கடவுள் ஊர்வலம் நடப்பதால் கொஞ்ச நேரம் ஒரத்தில் நிற்குமாறு கிங்கரர்கள் ஆத்திகரிடம் கூறினார்கள்.அவரும் ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வெள்ளை சிப்பாவும்,முகத்தில் தாடியும் கொண்ட மனிதனை தங்கள் தோல்களில் சுமந்த படி சென்றனர்.ஆத்திகர் கூட்டத்தை பற்றி கிங்கரர்களிம் கேட்டதற்கு கிறித்தவர்கள் கூட்டம் என கூறினார்கள்.
அந்த கூட்டம் போன பின்பு மற்றொரு கூட்டம் வந்தது. அவர்களும் ஒரு பெரிய மனிதரை தங்கள் தோல்களில் சுமந்து ஆடிக்கொண்டே சென்றனர்.அவர்கள் பற்றி கேட்ட போது இஸ்லாமியர்கள் கூட்டம் என கூறினார்கள்.
அதற்கடுத்தாற் போல் அமைதியாக ஒரு மனிதன் நடந்து போனார்.அவரை பின் பற்றி அமைதியாக ஒரு கூட்டம் சென்றது.அவர்களை பார்த்த உடனே புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என ஆத்திகர் புரிந்து கொண்டார்.
இவ்வாறாக சிறிதும் பெரிதுமாக கூட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.இறுதியில் ஒரே ஒரு வயதான மனிதர் மட்டும் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார்.அவர் பின்னால் எந்த கூட்டமும் இல்லை.
இதைப்பார்த்த ஆத்திகருக்கு ஒரே ஆச்சர்யம்.ஓடிப்போய் அவரிடமே நீங்கள் யார்?உங்களை நான் பூமியில் பார்த்ததே இல்லை என கூறினார்.
அதற்கு அந்த வயதான மனிதர் நான் தான் கடவுள் என்றார்.
========================================================================
"ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்" என்று ஒரு மத போதகர் போதகம் செய்து கொண்டிருந்தார்.இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் பரிசோதிக்க விரும்பினான்.
உடனே போதகர் கன்னத்தில் அறைந்தான்.
உண்மையான போதகர் மறுகன்னத்தையும் காண்பித்தார்.
இந்த முறை அவன் தன் முழு உடல் பலத்தையும் பயன்படுத்தி ஓங்கி மறு கன்னத்திலும் அறைந்தான்.
உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக அடிக்கத்தொடங்கினார்.
வலிதாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.
"என்ன செய்கிறீர்கள்?காலையில்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னதைக் காட்ட சொன்னீர்கள்?"
துறவி சொன்னார் :
"ஆம்.எனக்கு மூன்றாம் கன்னம் இல்லையே; ஏசுவும் மறு கன்னத்தோடு நிறுத்திக்கொண்டார்.அதற்கு பிறகு நான் விரும்பியதை செய்து கொள்ளலாம்.ஏசு இதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை என்றார்".
=======================================================================
மேலும் படிக்க :
No comments:
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..