About Me

Friday, June 27, 2014

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கான கவிதைகள்
எழுதப்படாமல் காத்திருக்கின்றன.
உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள்
பரிமாறப்படாமல் இதயக்கூட்டில் காத்திருக்கின்றன.
உனக்கான முத்தங்கள்,
உனக்கான ரோஜா,
உனக்காக சேகரித்த மயிலிறகு,
நாம் கைகோர்த்து நடக்க வேண்டிய
கடற்கரை மணற்பரப்பு,
இரவின் நிழல்,
நிலவின் மடி,
குளிர்கால போர்வைகளென,
எல்லாம் காத்திருக்கின்றன,
உன் ஒற்றை சொல்லுக்காக,
எப்போது சொல்லப்போகிறாய்?
உன் காதலை என்னிடம்.


2 comments:

  1. இது இந்த ப்லாக்கில் நான் படிக்கும் முதல் கவிதை என நினைக்கிறேன், அழகாய் வந்திருகிறது கவிதை. ஜென் நிலையை தாண்டிய இந்த பதிவும் நன்றாகவே இருக்கிறது சகோ!!

    ReplyDelete
  2. தலைப்பில் ஒரு //காத்திருக்கிறன் // என்றிருக்கிறதே?

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..