About Me

Tuesday, January 21, 2014

உன் மெளனத்தின் முன்னால்

உன் மெளனத்தின் முன்னால்
ஒரு குழந்தையாய் தவிக்கிறேன்!
கொல்ல நினைக்கிறாயா?
கொஞ்ச  நினைக்கிறாயா?

உன் மெளனத்தின் முன்னால்
என் இதயம் துடிப்பது கூட
எரிசலாய் இருக்கிறது.

உன் மெளனத்தின் முன்னால்
என் ஊன்னுடம்பு
மெழுகாய் உருகுகிறது.

 உன் மெளனத்தின் முன்னால்
 உனக்கும் எனக்கும் இடையேயான
கால தூர பிரபஞ்சபோர்வை நீள்கிறது.

 உன் மெளனத்தின் முன்னால்
உணர்வுகளை தொலைத்த
புத்தனாகிறேன்.

மொத்தத்தில்
உன் மெளனத்தின் முன்னால்,நான்
என்னையே தொலைத்து தேடுகிறேன்.




4 comments:

  1. என்றும் மௌனம் சிறந்தது... நல்லதொரு கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    ReplyDelete
  3. இவ்வளவு இருக்கா மௌனத்தின் முன்பு... சகோ எப்படி இருக்கிங்க ?

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றாக உள்ளேன் சகோதரி.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..