About Me

Friday, February 17, 2012

காதல் பயம் - Love Fear

காதல் பயம்
காதல் பயம்
காதல்வரா வானத்தினூடே
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !

அன்பால் கொல்லாதே

அன்பால் கொல்லாதே
மென்மையே மென்மையென
பொன்னிற மேனியென
அழகியதொரு பட்டாம்பூச்சி
தோட்டத்தில் பறக்கக்கண்டேன்
மலர்களின் மேலமர்வதுமாய்
மகரந்தம் குடிப்பதுமாய்
இடுப்பில் கயரில்லாமல்
சுதந்திரமாய் பறக்கக்கண்டேன்

உணர்வுகள் தடுமாற
அன்புவெள்ளம் பொங்கிவர
இதயத்தில் இடமொதிக்கி
அன்பென்னும் கூட்டிலடைத்தேன்
அன்பென நினைத்து
நான் செய்த காரியங்கள்
சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்க
நிறையிழந்த இலையென
அன்பில் கருகி
பிணமாய் காட்சியளித்தது
அன்புகூட கொல்லுமென
கடைசியாய் வந்த ஞானம்
கண்ணீர்த்துளிகளுடன் சொன்னது
அன்பால் கொல்லாதே!