புள்ளி புள்ளியாக
சாவை நோக்கி நகரும்
மனித நேர்கோடு நான்!
பல பரிமாணச் சதைகளோடு
கூடித்திரியும்
ஒரு பரிமாணக்கோடு நான்!
வளைந்த காலவெளிக்குள்ளே
வாழ்க்கையை தேடும்
சிறு அதிர்வு நான்!
உடல் இயக்கவிதிகளெல்லாம்
தொலைத்துவிட்ட ஓர்
இதயம் நான்!
பிரம்மாண்டங்களுக்கிடையே பூத்த
சிறு மலருக்குள் - பதுங்கி வாழும்
வண்டு நான்!
இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடைப்பட்டு வாழும்
உயிர் ஜிவன் நான்!
சாவை நோக்கி நகரும்
மனித நேர்கோடு நான்!
பல பரிமாணச் சதைகளோடு
கூடித்திரியும்
ஒரு பரிமாணக்கோடு நான்!
வளைந்த காலவெளிக்குள்ளே
வாழ்க்கையை தேடும்
சிறு அதிர்வு நான்!
உடல் இயக்கவிதிகளெல்லாம்
தொலைத்துவிட்ட ஓர்
இதயம் நான்!
பிரம்மாண்டங்களுக்கிடையே பூத்த
சிறு மலருக்குள் - பதுங்கி வாழும்
வண்டு நான்!
இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடைப்பட்டு வாழும்
உயிர் ஜிவன் நான்!
வரிகளே பிரமாண்டமாய் .
ReplyDeleteம்ம் மிக ரசித்தேன் ”நான்”
ReplyDeleteநான் என்பதன் நானாவிதப் பரிமாணங்களையும் நேர்த்தியாய் பரிணமித்துக்காட்டும் அற்புதக் கவிதை. பாராட்டுகள் சேகர்.
ReplyDeleteவித்தியாசமான நான் (நீங்கள்)
ReplyDeleteஉங்களைப்பற்றிய உள்மனதின் சிறுகுறிப்போ இது !
ReplyDeleteஉங்கள் கவிதைகளை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் இருப்பின் வாசிக்கவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/06/2.html
நன்றி.
நல்ல கவிதை ! நன்றி !
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !