வெப்ப இயக்கவியலின்(Thermo dynamics) இரண்டாம் விதி.உலகில் பல விஞ்ஞானிகளால் பலவித அர்த்தங்கள் சொல்லப்பட்டு இன்னும் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட விதி என்றும் சொல்லலாம்.இன்னும் பல ஆராய்ச்சிகள் இந்த விதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பிரபஞ்சத்தின் தோற்றம்,முடிவு சம்பந்தமான ஆய்வுகளுக்கும்,கோள்கள்,நட்சத்திரங்கள் ,மனித இனத்தின் தோற்றம் என எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்பயன்படும் விதி.நோபல் பரிசுக்கென சிலர் இன்னும் இவ்விதியை வைத்து மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
என்ட்ரோபி(entropy) என்பது ஒரு அமைப்பின்(System) ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பற்றி கூறுவது.
(அல்லது)
ஒரு அமைப்பிற்கு(System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும்(q) அதன் வெப்பநிலைக்கும்(T) உள்ள விகிதம் (q/T)ஆகும்
பள்ளியில் நாம் படித்த ஒரு சின்ன அறிவியல் விதி வெப்பம் சூடான இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்தை நோக்கிப் பரவும்.ஆனால் நாம் எப்போதாவது ஏன் வெப்பம் ஏன் குளிர்ந்த இடத்திலிருந்து சூடான இடத்தை நோக்கி பாயக்கூடாது என கேட்டதுண்டா? பரவாயில்லை இப்போது கேட்போம் ஏன் பாயக்கூடாது?
குளிர்ந்த பனிக்கட்டியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) ஒரு நிலைத்தன்னையுடன் குறைந்த பட்ச ஓர் ஒழுங்கமைப்பில்(Order) இருக்கும்.
ஓர் சூடான கம்பியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) அதிக ஆற்றலால் அதிக இயக்க ஆற்றலைப்(kinetic energy) பெற்றிருக்கும்.அதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி ஓர் ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பெற்றிருக்கும்.
இப்போது சூடான கம்பியை பனிக்கட்டியில்விடும்போது கம்பியில் உள்ள அதிக ஆற்றல் மூலக்கூறுகள் பனிக்கட்டி மூலக்கூறுகளை மோத ஆரம்பிக்கும் .கம்பியின் அதிக ஆற்றல் மூலக்கூறுகள் தங்கள் ஆற்றலை பனிக்கட்டி மூலக்கூறுகளின் மீது மோதி செலுத்தும்.இதனால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும் அதன் மூலக்கூறு அமைப்பும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
ஏற்கனவே சூடான கம்பியின் என்ட்ரோபி(entropy)(ஒழுங்கற்ற தன்மை) அதிகம் இருந்தது இப்போது வெப்ப ஓட்டம் காரணமாக பனிக்கட்டியின் என்ட்ரோபி (ஒழுங்கற்ற தன்மை) அதிகரித்து விட்டது.மொத்த என்ட்ரோபி ஏற்கனவே இருந்ததை விட இப்போது அதிகரித்துவிட்டது.
சூடான கம்பியின் மூலக்கூறுகள் தனது அதிகப்படியான ஆற்றலை இழந்தால் தான் சமநிலை அடையமுடியும் .அதனால் அதிகப்படியான ஆற்றலை பனிக்கட்டியின் மூலக்கூறுகளிடம் இழந்து சமநிலை(Equilibrium) அடைகிறது.இதனால் வெப்பம் அல்லது ஆற்றல் எப்போதும் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கி பாயும்.
ஒரு அமைப்பின் என்ட்ரோபி(ஒழுங்கற்ற அமைப்பு) எப்போதும் அதிகரிக்கும் அல்லது ஏற்கனவே இருந்த மதிப்பாக இருக்கும்.ஆனால் குறையவே குறையாது.
மிக முக்கியமான ஒரு விதி இயற்கை எப்போதும் ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்ற அமைப்பை நோக்கியே செல்லும்.ஆனால் ஒழுங்கற்ற அமைப்பிலிருந்து ஒழுங்கை நோக்கி செல்ல வெளியிலிருந்து ஆற்றல் அல்லது வேலை செய்ய வேண்டும்.
உதாரணங்கள் :
சிதறிய செங்கற்கள் ஒழுங்கற்ற அமைப்பில் இருக்கும்.இப்போது என்ட்ரோபி அதிகம் உள்ளது.அதை ஒழுங்காக அடுக்க நாம் நமது ஆற்றலை வேலையாக செலவழித்தால் ஒழுங்காகமாறிவிடும்.இப்போது செங்கற்களின் என்ட்ரோபி குறைந்து விட்டது.
கவனிக்க :
என்ட்ரோபி குறையவே குறையாது என்று சொன்னேன் ஆனால் இப்போது குறைகிறதே என நீங்கள் கேட்கலாம்.இங்கு தான் பல அறியாமை தவறுகள் நடக்கின்றன.மொத்த அமைப்பை பார்க்க வேண்டும்.நாம் ,செங்கள் ,சுற்றுச்சூழல் மொத்ததையும் ஓர் அமைப்பாக கருதவேண்டும்.செங்களை அடுக்க ஆற்றலை செலவழித்து நாம் வேலை செய்கிறோம் .வெப்பத்தினால் நமது என்ட்ரோபி அதிகரிக்கிறது.செங்களின் என்ட்ரோபி குறைக்க நாம் அதிக வேலை செய்து நமது என்ட்ரோபியை அதிகரிக்கிறோம்.இதனால் மொத்த என்ட்ரோபி அதிகரிக்கிறது.
என்ட்ரோபி செயல்பட ஒரு அமைப்பு(System) புறவிசை(External factors) எதுவும் பாதிக்காதாகவும்,மூடியதாகவும்(closed), தொடர்ந்து மாறிக்கொண்டே(changing) இருக்க கூடியாதாகவும் இருக்க வேண்டும்.
புறவிசை(External factors) எதுவும் பாதிக்காத ஒரு அமைப்பு(System) நேரம்(Time) ஆக ஆக எப்போதும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கியே செல்லும்.
என்ட்ரோபி(entropy) எப்போதும் ஒழுங்கமைப்பை(Order) பற்றி கூறுகிறது ஒழுங்கைப்பற்றி(disipline) அல்ல.
http://mapyourinfo.com
குறிப்பாக பிரபஞ்சத்தின் தோற்றம்,முடிவு சம்பந்தமான ஆய்வுகளுக்கும்,கோள்கள்,நட்சத்திரங்கள் ,மனித இனத்தின் தோற்றம் என எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்பயன்படும் விதி.நோபல் பரிசுக்கென சிலர் இன்னும் இவ்விதியை வைத்து மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
விதி :
என்ட்ரோபி(entropy) என்பது ஒரு அமைப்பின்(System) ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பற்றி கூறுவது.
(அல்லது)
ஒரு அமைப்பிற்கு(System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும்(q) அதன் வெப்பநிலைக்கும்(T) உள்ள விகிதம் (q/T)ஆகும்
பள்ளியில் நாம் படித்த ஒரு சின்ன அறிவியல் விதி வெப்பம் சூடான இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்தை நோக்கிப் பரவும்.ஆனால் நாம் எப்போதாவது ஏன் வெப்பம் ஏன் குளிர்ந்த இடத்திலிருந்து சூடான இடத்தை நோக்கி பாயக்கூடாது என கேட்டதுண்டா? பரவாயில்லை இப்போது கேட்போம் ஏன் பாயக்கூடாது?
ஒரு சோதனை :
குளிர்ந்த பனிக்கட்டியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) ஒரு நிலைத்தன்னையுடன் குறைந்த பட்ச ஓர் ஒழுங்கமைப்பில்(Order) இருக்கும்.
என்ட்ரோபி(entropy) |
ஓர் சூடான கம்பியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) அதிக ஆற்றலால் அதிக இயக்க ஆற்றலைப்(kinetic energy) பெற்றிருக்கும்.அதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி ஓர் ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பெற்றிருக்கும்.
இப்போது சூடான கம்பியை பனிக்கட்டியில்விடும்போது கம்பியில் உள்ள அதிக ஆற்றல் மூலக்கூறுகள் பனிக்கட்டி மூலக்கூறுகளை மோத ஆரம்பிக்கும் .கம்பியின் அதிக ஆற்றல் மூலக்கூறுகள் தங்கள் ஆற்றலை பனிக்கட்டி மூலக்கூறுகளின் மீது மோதி செலுத்தும்.இதனால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும் அதன் மூலக்கூறு அமைப்பும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
ஏற்கனவே சூடான கம்பியின் என்ட்ரோபி(entropy)(ஒழுங்கற்ற தன்மை) அதிகம் இருந்தது இப்போது வெப்ப ஓட்டம் காரணமாக பனிக்கட்டியின் என்ட்ரோபி (ஒழுங்கற்ற தன்மை) அதிகரித்து விட்டது.மொத்த என்ட்ரோபி ஏற்கனவே இருந்ததை விட இப்போது அதிகரித்துவிட்டது.
கேள்வியின் பதில் :
சூடான கம்பியின் மூலக்கூறுகள் தனது அதிகப்படியான ஆற்றலை இழந்தால் தான் சமநிலை அடையமுடியும் .அதனால் அதிகப்படியான ஆற்றலை பனிக்கட்டியின் மூலக்கூறுகளிடம் இழந்து சமநிலை(Equilibrium) அடைகிறது.இதனால் வெப்பம் அல்லது ஆற்றல் எப்போதும் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கி பாயும்.
என்ட்ரோபி(entropy) |
ஒரு அமைப்பின் என்ட்ரோபி(ஒழுங்கற்ற அமைப்பு) எப்போதும் அதிகரிக்கும் அல்லது ஏற்கனவே இருந்த மதிப்பாக இருக்கும்.ஆனால் குறையவே குறையாது.
மிக முக்கியமான ஒரு விதி இயற்கை எப்போதும் ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்ற அமைப்பை நோக்கியே செல்லும்.ஆனால் ஒழுங்கற்ற அமைப்பிலிருந்து ஒழுங்கை நோக்கி செல்ல வெளியிலிருந்து ஆற்றல் அல்லது வேலை செய்ய வேண்டும்.
சிதறிய செங்கற்கள் ஒழுங்கற்ற அமைப்பில் இருக்கும்.இப்போது என்ட்ரோபி அதிகம் உள்ளது.அதை ஒழுங்காக அடுக்க நாம் நமது ஆற்றலை வேலையாக செலவழித்தால் ஒழுங்காகமாறிவிடும்.இப்போது செங்கற்களின் என்ட்ரோபி குறைந்து விட்டது.
என்ட்ரோபி(entropy) |
என்ட்ரோபி குறையவே குறையாது என்று சொன்னேன் ஆனால் இப்போது குறைகிறதே என நீங்கள் கேட்கலாம்.இங்கு தான் பல அறியாமை தவறுகள் நடக்கின்றன.மொத்த அமைப்பை பார்க்க வேண்டும்.நாம் ,செங்கள் ,சுற்றுச்சூழல் மொத்ததையும் ஓர் அமைப்பாக கருதவேண்டும்.செங்களை அடுக்க ஆற்றலை செலவழித்து நாம் வேலை செய்கிறோம் .வெப்பத்தினால் நமது என்ட்ரோபி அதிகரிக்கிறது.செங்களின் என்ட்ரோபி குறைக்க நாம் அதிக வேலை செய்து நமது என்ட்ரோபியை அதிகரிக்கிறோம்.இதனால் மொத்த என்ட்ரோபி அதிகரிக்கிறது.
முக்கியவிதி :
என்ட்ரோபி செயல்பட ஒரு அமைப்பு(System) புறவிசை(External factors) எதுவும் பாதிக்காதாகவும்,மூடியதாகவும்(closed), தொடர்ந்து மாறிக்கொண்டே(changing) இருக்க கூடியாதாகவும் இருக்க வேண்டும்.
புறவிசை(External factors) எதுவும் பாதிக்காத ஒரு அமைப்பு(System) நேரம்(Time) ஆக ஆக எப்போதும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கியே செல்லும்.
என்ட்ரோபி(entropy) எப்போதும் ஒழுங்கமைப்பை(Order) பற்றி கூறுகிறது ஒழுங்கைப்பற்றி(disipline) அல்ல.
மேலும் படிக்க :
No comments:
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..