About Me

Thursday, January 12, 2012

மொழி வணக்கம்

ஒலிக்கும் மொழிகளில்
இனிக்கும் மொழியாய்
இசைக்கும் ஒலிகளில்
இனிக்கும் தேனாய்
பிறந்த மழலை
மெல்லும் சொல்லாய்
கட்டிக் கரும்பில்
இனிக்கும் தேனாய்

வானாய்,மண்ணாய்
ஊனாய்,உயிராய்
அன்னை ஊட்டிய
சுவை அமுதாய்
கொஞ்சும் மகளிர்
இதழில் பெருகும்
இன்பத்தேனாய்
வாழ்விலும் வளர்ச்சியிலும்
உன்மடி சாய்த்து
என்னை வளர்க்கும்
தமிழ் அன்னையே
உன்னை வணங்குகிறேன்!


3 comments:

  1. அன்னைத் தமிழை அழகுத் தமிழால் ஆராதித்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..