என் பெயர் தனசேகரன்.நான் ஒரு மென்பொருள் வடிவமைப்பாலன்.தற்போது நான் மதுரையில் Sri MookambikaInfo Solution னில்
வேலை செய்து கொண்டிருக்கிறேன்.பாலையையும் உழைப்பினால் சோலையாக்கிய ஊரில்
பிறந்தவன்.உழைப்பையும் விடாமுயற்சியையும் தன்னகத்தே கொண்ட குட்டி ஜப்பான் என்று செல்லமாக அழைக்கப்படும் சிவகாசி என் சொந்த ஊர்.சேகர்
என்ற புனைப் பெயரில் கவிதை,கட்டுரைகள் என எனக்கு தெரிந்ததை
எழுதிக்கொண்டிருக்கிறேன்.இங்கு எனக்கு தெரிந்த புரிந்த விசயத்தை பதிய
முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.உங்கள் அன்பும் ஆதரவும்
எதிர்பார்க்கிறேன்.
தோல்வியென்னும் சூறாவளியாலும்
வெற்றியென்னும் வெடிகுண்டாலும்
உடையாத கோட்டை கட்ட
கருங்கல் கேட்டேன் அவனிடம்
அவனோ தோல்வியை
மட்டுமே தந்தான்
தோல்வியை வைத்தே
கோட்டை கட்டினேன் - அற்புதம்
இப்போது எதையும் தாங்கும்
அற்புதக் கோட்டை என்னிடம்
அது என் மனக்கோட்டை
அதை தந்தவனுக்கு
நன்றி சொன்னேன்
அவனோ நான் கொடுத்தவற்றை
மற்றவருக்கு கொடுத்துவிடு என்றான்.
கொடுப்பதும் நான்
கொடுக்கும் பொருளும் நான்
எல்லாம் நான்
வெறும் பேனா நீ
என சொல்லி மறைந்தான்
என் சொந்த ஊரைப்பற்றி
தோல்வியென்னும் சூறாவளியாலும்
வெற்றியென்னும் வெடிகுண்டாலும்
உடையாத கோட்டை கட்ட
கருங்கல் கேட்டேன் அவனிடம்
அவனோ தோல்வியை
மட்டுமே தந்தான்
தோல்வியை வைத்தே
கோட்டை கட்டினேன் - அற்புதம்
இப்போது எதையும் தாங்கும்
அற்புதக் கோட்டை என்னிடம்
அது என் மனக்கோட்டை
அதை தந்தவனுக்கு
நன்றி சொன்னேன்
அவனோ நான் கொடுத்தவற்றை
மற்றவருக்கு கொடுத்துவிடு என்றான்.
கொடுப்பதும் நான்
கொடுக்கும் பொருளும் நான்
எல்லாம் நான்
வெறும் பேனா நீ
என சொல்லி மறைந்தான்
என் சொந்த ஊரைப்பற்றி
என் தளத்தில் உங்களுக்காக இரண்டு விஷயங்கள் காத்திருக்கிறது சகோ. வாருங்கள். இன்றைய என் இரண்டு பதிவுகளையும் பாருங்கள். அன்போடு அழைக்கிறேன். நன்றி.
ReplyDelete