ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலையுண்டு
பணத்தை நாம் சம்பாதிக்காவிட்டால்
பணம் நம்மை சம்பாதித்துவிடும்.
பணம் பத்தும் செய்யும் என்பதை விட பணம் எல்லாம்செய்யும் என்பதே உண்மை.நாம் வாழும் இந்த உலகமே பணம் என்னும் மாயையால் பின்னப்பட்ட மெய்நிகர் உலகம்.நாம் பார்க்கும் செய்திகள்,சாப்பிடும் சாப்பாடு ,பிடித்த ,பிடிக்காத என எல்லாவிசயத்தையும் பணமே தீர்மானிக்கிறது.பெரும் ஊழல் என செய்தி படிக்கிறோம்.ஊழல் செய்தவர் விடுவிக்கப்பட்டசெய்தி எந்த பத்திரிக்கையிலும் வருவதில்லை.பணம் கொடுத்து செய்தியால் ஒருவர் மரியாதையை குறைக்கலாம்.பணம் கொடுத்து ஒருவர் மரியாதையை கூட்டலாம்.பிரச்சனைகளை திசை திருப்பலாம்.பணமென்னும் பூதத்தின் பிடியில் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.
சரி பணம் தேர்தல் முடிவுகளை மாற்றுமா?
கண்டிப்பாக மாற்றும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அமெரிக்க அதிபர் தேர்தலிலே பல முறை அதிக பணம் செலவு செய்தவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஒரு மனிதனுக்கு நூறு ரூபாய் என்றால் ஏழுகோடி மனிதர்களுக்கு கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.இவ்வளவு கோடி கோடியான பணத்தை செலவு செய்வது வெறும் ஒரு சதவீத மனிதர்கள்.இந்த ஒரு சதவீத மனிதர்கள் ஏன் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்?
ஏனென்றால் தங்களுக்கு சாதகமான,தங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்க ஒத்துழைப்பு தருபவர்களை வெற்றி பெற வைக்க இப்பணத்தை செலவழிக்கிறார்கள்.இப்பணத்தை பயன்படுத்தி எதிர்மறையான விளம்பரங்களை உருவாக்கி எதிரணியை தோற்கடிக்கவே பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாக ஒரு அமைச்சரை பற்றி வாட்ஸ் ஆப்பில் அசிங்கமான ஒரு செய்தி இந்த தேர்தல் நேரத்தில் ஏன் வரவேண்டும்.பைத்தியம்,முட்டாள் என தாங்கள் நினைக்கும் தோற்றத்தை எதிரணியினர் மீது ஏற்படுத்த இப்பெரும் பணம் பயன்படுகிறது.பெரும்பாலும் இப்பணத்தில் மஞ்சக்குளிப்பது என்னவோ செய்தி நிறுவனங்கள் தான்.இதற்கென பிரத்தியேக கார்ப்ரேட் நிறுவனங்களே இருக்கின்றன.
நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.என்ன பஞ்ச் பேச வேண்டும்.நம் நடைவுடை பாவணி என எல்லாமே அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.அது மட்டுமில்லாமல் எதிர் அணியின் மீது திட்டமிட்டு எதிர்மறையான செய்திகள் பரப்புவது,அவர்களின் மரியாதையை மக்களிடம் குறைப்பது என எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.நாம் பணம் கொடுக்க தயாராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் கேனையனாக்கலாம்,குடிகாரானாக்கலாம்.
இதையெல்லாம் படிக்கும் போது தற்போது தமிழ் நாட்டு அரசியலில் நடக்கும் காமெடி காலாட்டாக்களை ஒப்பிட்டு பாருங்கள் எல்லாம் புரியும்.நிதனமாக யோசித்தால் இவையெல்லாமே மக்களாகிய நம்மை கடைசிவரை மடையர்களாகவே வைக்க பெரும் பணம் படைத்தவர்கள் செய்யும் சூழ்ச்சி என்பது நன்றாகவே புரியும்.
இவ்வளவு பணம் கொட்டி நல்லது செய்ய இவர்கள் என்ன பாரி வள்ளலா?அவர்களை பொருத்தவரை இதும் ஒரு வகையான முதலீடு.நமக்கு நூறு ரூபாய் கொடுத்து தேர்தலில் வெற்றி பெருபவர்கள் ,முதலீடான நூறு +அடுத்த தேர்தலுக்கான முதலீடாக நூறு+ லாபமாக நூறு என முந்நூறு சம்பாதித்தால் மட்டுமே லாபம்.இந்த லாபத்தை மக்களின் பையில் இருந்து முறையாக எடுப்பதற்கு தான் இந்த அரசியல் ஆட்டம்.
நம் பையில் நூறை வைப்பது போல் வைத்து,நம்மையே உலக வங்கியுடம் அடகு வைத்து பல லட்சம் கோடி கடன் வாங்கி தங்கள் பைக்குள் வைத்துக்கொள்வார்கள். சம்பந்தமே இல்லாமல் பொருளின் விலைகளை ஏற்றி நம் பையில் இருந்து சில பல நூறுகளை எடுத்துக் கொள்வார்கள்.
இந்த சூது தெரியாமல் நூறு தானே என பணத்தை வாங்கி பையில் வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிடுகிறோம்.அரசியல்வாதிகளோ பெரிய நாம கட்டிவாங்கி நாமத்தை நமக்கு சாத்துகிறார்கள்.இன்று நாம் வாங்கும் நூறுதான் நாளைய பல கோடி ஊழல்களுக்கு அடித்தளம்.மக்களுக்கு இந்த பண அரசியல் புரியாதவரை பணத்தையும், அரசியல் வாதிகளையும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை.
ReplyDeleteஉங்களுக்கு புரிந்தது பொது மக்களுக்கும் புரிந்தால் நல்ல பலன் கிடைக்கும்