About Me

Saturday, March 8, 2014

கதை நேரம் ---- வாயால் வந்த வினை

வாழ்க்கையில் பெரிய பிரச்சனையே பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அல்லது பேசாமல் இருக்க வேண்டிய இடத்தில் உளறிக்கொட்டுவது தான்.
சில நேரங்களில் உண்மையை மறைக்க ஒரு பொய் சொல்வோம்.அப்புறம் பொய்யை மறைக்க இன்னொரு பொய். இப்படியே போய் பொய்யே வாழ்க்கை ஆகிவிடும்.






ஒரு ஊரில் பாலம் கட்டி இருந்தார்கள்.பெரிய விழா எடுத்து அந்த ஊர் அமைச்சரை அந்த பாலத்தை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனால் நிறைய போக்குவரத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனர்.

ஒரு போட்டி ஒன்னும் அறிவிச்சாங்க.அதாவது நூறாவதா அந்த பாலத்தை கடக்குற  வண்டிக்கு பணமுடிப்பை கொடுக்க போறதா அறிவிச்சாங்க.

அமைச்சரும் பாலத்தை திறந்து வச்சு முதல் ஆள பாலத்தை கடந்து போனாரு.அவரை தொடர்ந்து ஒவ்வொரு காரா கடக்க ஆரம்பிச்சது.விழா ஏற்பாடு செஞ்சவங்க ஒவ்வொரு காரா எண்ண ஆரம்பிச்சாங்க.

 நூறாவத வந்த அந்த கார் டிரைவரிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பரிசை என்ன செய்யப்போகிறீர்கள்? என கேட்டனர்.

உடனே அந்த ஆள் இந்த பணத்தை வைத்து டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறேன்னு சொன்னான்.


என்னது நீ டிரைவிங் லைசென்ஸ் இல்லாமதான் வண்டி ஓட்டிட்டு இருக்கியானு அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

காருக்குள்ள அமர்ந்திருந்த அவர் மனைவி நிலைமையை புரிஞ்சிகிட்டாங்க.

கணவரை காப்பாத்தியாகனும். உடனே அவங்க சொன்னாங்க

ஐயா இவர் சொல்றதை நம்பாதிங்க.குடிச்சிட்டு உளறுறாரு.

ஓ இந்த ஆளு குடிக்க வேற செஞ்சிருக்கானா?

காருக்குள்ள இருந்த அந்த ஆளோட அப்பாக்கு காது கேட்காது.ஆனா ஏதோ சிக்கல் மட்டும் புரிஞ்சது.

அப்பவே சொன்னேன் கார திருடாதனு.இவன் கேட்கவே இல்லைனு மெதுவா முணங்க ஆரம்பித்தார்.

இது திருட்டுகாரானு கேட்டு அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்..

எப்படி பேசக்கூடாது என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..