தோள்கொடுக்க வருவீரோ |
சோகத்தை கலந்தது யார் ?
பூக்களின் தோட்டத்தில்
கற்களை வீசியது யார் ?
சொற்களின் கூட்டத்தில்
சோகத்தை வீசியதார் ?
விழியிரண்டும் அழுகிறதே
இமையிரண்டும் துடிக்கிறதே
கனவெல்லாம் கரைகிறதே
வாய்ப்பெல்லாம் பறக்கிறதே
தோல்விகள் எனைச்சூழ
இதயமும் உடைகிறதே !
சிறகொடிந்த பட்டாம்பூச்சி
பறக்கத்தான் ஆசைப்பட்டேன் !
சொல்லித்தர யாருமில்லை
தோள்கொடுக்க ஆளுமில்லை
மூச்சடக்கி முயற்சித்தேன்
முட்டுச்சந்தில் மோதிவிட்டேன்
சிறகுகளும் முளைக்காதோ ?
கனவுகளும் பலிக்காதோ ?
சிறகொடிந்த வாழ்க்கைக்கு
தோள்கொடுக்க வருவீரோ?
தோழனாக ஆவிரோ?
பாட்டாளி
ஜென் zen
தன்னம்பிக்கை