உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள் |
உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள்
கடவுளின் மகனே
நீ பிறக்கும் போது - நீ
அழுதாய் உலகம் சிரித்தது
நீ இறக்கும் போது உனக்காக
அழும் கண்களை சம்பாதித்துவிட்டு
சிரித்துக்கொண்டே இறப்பாய்
நிலவில் நடக்கமுடிந்த உன்னால்
சாலையில் நடக்க முடியவில்லை
துல்லியமாக ஆயுதம் செலுத்தும் உன்னால்
பிள்ளைக்கு ஒதுக்கிய நேரத்தை
கடைபிடிக்க முடியவில்லை
வாழும் காலத்தில் - நீ
வருடி கொடுத்தவர் எத்தனை பேர்?
விதைகளுக்கு உன்
பங்களிப்பு என்ன?
வாழ்க்கையில் செயல்படாவிட்டால்
வாழ்க்கை உன்மீது செயல்படும்
நாட்கள் வாரமாகி
வாரம் மாதமாகி - இறுதியில்
கவலை நிறைந்த இதயத்துடன்
கண்ணீருடன் இறக்கப்போகிறாயா?
விழித்துக் கொள்வீர்
தனித்துவ சிந்தனையும்
மகத்துவ ஆற்றலும் படைத்தவரே
பூமியின் மீது உங்கள் வருகை
உன்னத காரியம் செய்ய
உங்கள் குறிக்கோள் என்ன?
உங்களுக்கான அழைப்பு என்ன?
முழுவீச்சுடன் செயல்படுவீர்
யாருக்காக காத்திருக்கிறீர்கள்?
எந்த அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள்?
அண்ணல் சொன்னது போல்
மாற்றத்திற்காக காத்திருக்காதீர்
மாற்றத்தை நீங்களே செய்யுங்கள்
நீங்களே மாற்றமாக இருங்கள்!
வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !
இன்று
முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என
நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது
உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற
சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.
நன்றி