அழகான அந்த கவிதை
வாசித்து முடிக்கப் பட்டதும்
அரங்கமே அதிர்ந்தது - கர ஒலியில்
அதை எழுதிய மாணவன்
பிற்படுத்த பட்டவன் என்பதால்
அக்கவிதை நிராகரிக்கவும் பட்டது.
இங்கே மனிதர்கள் மட்டுமல்ல ,
கடவுளே பிறந்தாலும் -
உயர்குடியில் பிறந்தால் தான்
டம்ளரில் டீ- இல்லையென்றால்
சிரட்டையில் தான் டீ.
ReplyDeleteஅன்புள்ள தன சேகர், கவிதை நடைமுறையைக் குறிப்பிடுகிறது புரிகிறது. உண்மைச் சம்பவமானால் எல்லா விவரங்களுடனும் அல்லவா பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு. ஏற்ற தாழ்வுகள் பற்றி நான் நிறையவே எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்திடுங்கள்.
கண்டிப்பாக தங்கள் பதிவை வாசித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.
Deleteஇந்த நிலை மாறும்... மாறியே தீரும்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
ReplyDeleteவணக்கம் தனசேகரன்.
ReplyDeleteநான் வலையைத் திறக்கும் போது வந்தீர்கள்.
அதன்பிறகு வொம்ப நாளாகவே உங்களைக் காணோம்....
திரும்பவும் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி.
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் இன்றுமா அந்த நிலை...?
மாற வேண்டும். மாற்ற வேண்டும்.
வாழ்த்துக்கள் நண்பரே.
தீண்டாமை என்பது
ReplyDeleteமனதில்தான் உள்ளது
அது வெளியில் இல்லை
மனதில் இருந்தால்தான்
அது வெளியில் தலையைக் காட்டும்
அதை மனதை விட்டு நீங்காமல் என்றும்
எந்நிலையிலும்இருக்குமாறு
பார்த்துக்கொள்வதிலேயே
அனைவரும் குறியாய் இருக்கின்றனர்.
அதனால்தால் அது இன்னும்
நம் நாட்டை விட்டு
வெளியேற மறுக்கிறது.
தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள்
மக்களின் மனதில் எவ்வளவோ
மாற்றங்களை கொண்டு வந்துள்ளது
மறுக்க முடியாத உண்மை
ஆனால் இன்னும் உலகத்தில்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத
சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
அவர்களை ஒதுக்கிவிட்டு
முன்னேற முயற்சிப்பதுதான்
அறிவுடைமை
அவர்கள் செயலை பெரிதுபடுத்துவது
அவர்கள் பெறும் அற்ப வெற்றிக்கு
துணை நிற்கும்.
இன்று உலகம் எங்கோ போய்விட்டது
பலவகையில் அனைவரும் ஒன்றாகிவிட்டனர்
எல்லோரும் ஒன்றுபோல் உடை உடுத்துகின்றனர்
உண்கின்றனர்.
மதிப்பு என்பது நாம் மற்றவர்களிடம்
நடந்துகொள்ளும்
பண்புகளை பொறுத்தது
அதை தேடி பெறக்கூடாது .
அதுவாகவே நம்மை தேடிவரவேண்டும்
ஒவ்வொருவனையும் ஒவ்வொருவனும்
மதிக்கும் பண்பினை குழந்தைகள் நிலையிலேயே
பயிற்றுவிக்கப்படவேண்டும்
அவர்கள் வருங்காலத்தில்
தீண்டாமை கொடுமையை
தவிர்த்துவிடுவார்கள்