About Me

Tuesday, March 13, 2012

ஈழப்புலம்பல்

ஈழப்புலம்பல்
அடிவானத்தின் கீழ்
வெறித்த பார்வையோடு
கண்ணீர் துளியோடு காத்திருக்கிறேன்
அவர்களுக்காக.
அழகியலில் திளைத்து
வார்த்தைகளை வளைத்து
உணர்வில்லாமல்
கவிதை கிறுக்கி திரிந்தேன் .
ஒரு மனித மிருகத்தின்
ஈழப்புலம்பல்கோர தாண்டவம்
என் மனக்கண்ணாடியை
உடைத்தெறிந்து விட்டது.
அதோஅந்த வானத்தின் கீழ்
அந்த கடலை தாண்டி
வேலிகளின் நடுவே
என் மக்கள் இருக்கின்றனர்.
இல்லம் துறந்து 
உண்ண உணவில்லாமல்
உடுக்க உடையில்லாமல்
உறுப்புகளை இழந்து
உற்றம் சுற்றம் இழந்து
நடைபிணமாக காத்திருக்கிறார்கள்
என் வருகைக்காக.
நானோ கையாளாகாதவனாய்
கண்ணீரோடு புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

அதோ அடிவானத்தின் கீழ்
இருள் கொடைவிரித்து வருகிறது.
வெளிச்சம் குறைந்து கொண்டே வருகிறது.
அவர்களின் எண்ணிக்கையும்
குறைந்து கொண்டே வருகிறது.
வலியும் வேதனையும்
என் மக்களை அரித்துக்கொண்டிருக்கிறது.
இருளும் ஒளியும்
என் மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
அந்த ஓணாய்கள் வேலிகளுக்குள்
என் மக்களை கொன்று
ஜீரணித்துக் கொண்டிருக்கின்றன.
நானோ இருளின் பிடியில்
கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறேன்
நல்ல விடியலுக்காக .








7 comments:

  1. கலங்க வைக்கிறீர்கள்!

    ReplyDelete
  2. உணர்வின் உண்மையைக் கவிதையில்
    கொட்டிக் காட்டியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  3. மனவேதனையை கவிதை ஆக்கி உணர்வோடு கலந்து விட்டீர்கள் சகோ. நன்றி கவிதைக்கு

    ReplyDelete
  4. அடிமனதின் வேதனைகளை மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்க்க உங்கள் கவிதை உதவுகிறது.நன்றி தம்பி !

    ReplyDelete
  5. வணக்கம் தோழரே ..
    உங்களைப்போன்றுதான் நானும் கையாலாகாத ,,,நிலையோடு விடியல் வருமென்று ..
    உணர்ச்சி படைப்புக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  6. ஒன்று பட்டால் விடியலுண்டு . தமிழா ஒன்று படு .

    ReplyDelete
  7. inguthan anaithum arasiyalakkapadukirathae.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..