About Me

Tuesday, April 12, 2016

ஜாலியாக ஜாவா கற்கலாம்: கணினி மொழி (computer language)

நாம் கருத்துகளையும்,உணர்வுகளையும் மொழியின் வாயிலாகவே வெளிப்படுத்துகிறோம்.ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக்கொள்ள மொழி மிக அவசியமான ஒன்று.அதுபோல் கணிப்பொறியுடன் இணைந்து செயல்பட கணினிக்கு என்று பிரத்தியேக மொழிகள் உண்டு.ஆனால் அடிப்படையில் கணினிக்கு தெரிந்த ஒரே மொழி இயந்திர மொழி(machine language) அல்லது இருநிலை மொழி(binary language) மட்டுமே.நாம் கணிப்பொறியுடன் இணைந்து செயல்பட இயந்திர மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.அது மிகவும் சிக்கலானதாகவும், புரிந்து கொள்ள கடினமானதாகவும் இருப்பதால் நமக்கு உயர்மட்ட கணினி செயலாக்க மொழிகள் (high level programming  language)தேவைப்படுகிறது.

உதாரணமாக நமக்கு தமிழ் மட்டுமே தெரியும் என வைத்துக்கொள்வோம்.ஒரு ஜெர்மன் நபருடன் உரையாட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?ஒன்று ஜெர்மன் மொழி படிக்க வேண்டும் அல்லது ஜெர்மனும்,தமிழும் தெரிந்த மொழிபெயர்ப்பாளரை(translator) உடன் வைத்துக்கொள்ள வேண்டும். கணினி செயலாக்க மொழிகள் இந்த மொழிபெயர்ப்பாளர் பணியைதான் செய்கின்றன.நாம் செய்ய வேண்டிய செயல்களை மனிதர்களுக்கு புரிந்த ஆங்கில மொழியில் சொன்னால் இந்த கணினி செயலாக்க மொழிகள்(programming  languages) கணினிக்கு புரியும் வகையில் இயந்திர மொழியில்(machine language) மொழிபெயர்த்து கொடுத்துவிடும்.

பொதுவாக மனிதர்களுக்கு புரியும் மொழியினை உயர்மட்ட மொழிகள் என்றும்((high level languages),இயந்திர மொழியினை கீழ்மட்ட மொழிகள்(low level  languages) என்றும் கூறுவர்.பெரும்பாலான கணினி செயலாக்க மொழிகள்(computer programming  languages) இந்த உயர்மட்ட மொழிவகையினை சேர்ந்தவை.

உயர்மட்ட மொழிகளால் முக்கியமான பலன்கள் உண்டு.
  • கற்றுக்கொள்வது எளிதாகிறது
  • கடினமான கணினி செயல்பாட்டினை புரிந்துகொள்ள அவசியமில்லை
  • நாம் செய்ய வேண்டிய செயலை மட்டும் கவனித்தால் போதும்

கணினி மொழியினை பொறுத்தவரை மேல் மட்ட மொழியிலிருந்து கீழே செல்ல செல்ல சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும்.இதனால் புரிந்து கொள்வதும் கடினமாகிறது. நாம் நம் செயல்முறையை மேல் மட்ட மொழிகளின் மூலமாகவோ அல்லது இயந்திர மொழியின் மூலமாகவோ செய்யலாம்.மேலே சொன்னவாரு கீழ் மட்டமொழியின் மூலம் செய்யும் போது அதிக சிக்கலும்,அதிக நேர விரயமும் ஏற்படுகிறது.இதனால் பெரும்பாலும் உயர்மட்ட மொழிகளிலே எல்ல கணினி செய்முறைகளும்
 எழுதப்படுகின்றன.

உயர்மட்ட மொழிகளுக்கு உதாரணமாக ஜாவா,சி,சி++ மொழிகளை கூறலாம்.ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் உண்டு.நம் தேவையை பொருத்து மொழியை தேர்தெடுக்க வேண்டும்.

  • இயந்திர மொழி(machine language) 
  • இருநிலை மொழி(binary language)
  • கணினி செயலாக்க மொழிகள்(programming  languages)
  • உயர்மட்ட கணினி செயலாக்க மொழிகள் (high level programming  language)
  • கீழ்மட்ட மொழிகள்(low level  languages) 
  • மொழிபெயர்ப்பாளரை(translator)  


முந்தய பதிவுகள் :

கணிப்பொறி செயலாக்கமுறை(computer programming)


                                                                                 ---- பயணம் தொடரும் ----