அண்டாவை காணோம் என்பது போல் இப்போதெல்லாம் விமானங்கள் காணாமல் போவது சர்வ சாதாரணமாகிவிட்டது.காணாமல் போனது கூட பரவாயில்லை. அதை கண்டுபிடிக்கிறோம் என்கிற பெயரில் மெகா சீரியல் ரேஞ்சுக்கு செய்திகள் வெளியிடுகிறார்கள் சம்பந்தப்பட்ட நாடுகளும் அதன் விமான நிறுவனங்களும்.கூகுள் மேப்பில் தன் வீடு தெரிகிறதா?தன் பைக் தெரிகிறதா? என்று தேடிச் செல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையான விசயம்.நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் விமானங்கள் காணாமல் போவதற்குரிய காரணங்களை வெளியிட்டிருந்தது.அதில் ஒரு செய்தி இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது பயணிகள் விமானத்தை ஓட்டுவதற்கு குறைந்த பட்சம் 1500 முதல் 3000 மணி நேரமாவது பயிற்சி செய்து ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் உள்ள விமானிகள் அதிக பட்சம் 100 மணி நேரம் தான் பயிற்சி பெற்றிருப்பதாகவும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு எப்படி செயல்படுவது என்பது தெரிவதில்லை என்று ஓய்வு பெற்ற விமானி கூறுகிறார்.இதில் வேடிக்கையான விசயம் பேட்டியளித்த விமானி வெறும் முப்பது மணிநேரமே பயிற்சி பெற்றதாக ஒப்புக்கொண்டார்.இதனால் கடுமையான பனிபொழிவு , சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு நடுவே எப்படி செயல் படுவது என்று முதலில் தெரியவில்லை என்றும், பின்னர் அனுபவத்தில் கற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார்.
சரியா சொன்ன நம்மள வச்சு தான் அவங்க விமானத்தை ஓட்டி பழகுறாங்க!அட பதறுங்களா நீங்க லோடுவச்சு ஓட்டி பழக நாங்க தான் கிடைச்சோமா?