About Me

Tuesday, March 11, 2014

சிந்தனை நேரம் : டிப்பிங் பாய்ன்ட்(tipping point)

ஒரு பொருள் அல்லது செயல் அதன் உச்சகட்ட அளவை எட்டுவதை ஆங்கிலத்தில் டிப்பிங் பாய்ன்ட்(tipping point) என்பார்கள்.சில நேரங்களில் சமுதாயத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ,சில பொருள்கள் அதன் உச்சகட்ட அளவை எட்ட காரணமாகலாம்.உதாரணமாக விளம்பரம் இல்லாமல் சாதாரணமாக வெளிவரும் ஒரு சிறு முதலீட்டு திரைப்படம் மவுத்டாக்(mouth talk) எனப்படும் வாய்வழி விளம்பரங்களாலும் ,இனணயதள விளம்பரங்களாலும்  அதன் உச்சகட்ட வெற்றியை பெற்று சக்கைபோடு போடும்.ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலும்  டிப்பிங் பாய்ன்ட்(tipping point)க்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் மக்களிடம் திடீரென்று பிரபலமாகி டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.
 
சரி இப்படி திடீரென்று ஒரு பொருள் அல்லது செயல் சந்தையில் பிரபலமாகி அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைய காரணம் என்ன?இதை நாம் நம் வளர்ச்சிக்கோ அல்லது நாம் சார்ந்த தொழிலுக்கோ பயன்படுத்த முடியுமா?
கண்டிப்பாக முடியும் .நம்மால் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சிறு மாற்றங்களை செய்ய முடியுமானால் நாம் உச்சகட்ட அளவு வெற்றியை எட்டமுடியும்.

நாம் முதலில் சொன்ன சிறு முதலீட்டு படத்தை எடுத்துக்கொள்வோம்.படம் வெளியாகி சரியாக 6 மணி நேரம் கழித்து ஒரு பத்து பேர் சேர்ந்தார் போல் படம் நன்றாக இருக்கிறது என்று இணையத்தில் எழுதினால் போதும்.அப்புறம் வாய்வழியாக ஒரு பத்து பேரிடம் படம் சூப்பர் என்று சொன்னால் போதும்.கண்டிப்பாக இது படத்தின் லாபத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.இதே போல் சில நல்ல படங்கள் கூட மோசமான விமர்சனங்களால் ஓடாமல் கூட போயிருக்கிறது.


இதற்கு காரணம் செயல்களின் பரவும்தன்மை.உண்மையில் ஒவ்வொரு செயலும் வைரஸ் போல் பரவும்தன்மை கொண்டவை.நான் கொட்டாவி என்று சொல்லும் போதும்  சரி அல்லது கொட்டாவி விடும் சத்தத்தை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்து கேட்கும் போதும் சரி உங்களுக்கு கொட்டாவி வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு செயல்களின் பரவும்தன்மை மிக முக்கியமான ஒன்று.


'வதந்திகள்' பரவும்தன்மைக்கு அருமையான உதாரணம்.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற வதந்தி காட்டு தீ போல பரவி எல்லோரும் அருகே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு  படையெடுத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

சில நேரங்களில் சமுதாயங்களில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட மிக பெரிய விளைவை ஏற்படுத்தலாம்.உதாரணமாக இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திடீரென அதன் உச்ச அளவை எட்டி இருக்கின்றன.இதற்கு சமுதாயத்தில் ஏற்பட்ட இரண்டு முக்கியமான காரணங்கள் தான்.ஒன்று இணையதளம் சுருங்கி ஒவ்வொருவர் உள்ளங்கைகளிலும் கைபேசியாக அமர்ந்திருப்பது.மற்றொன்று பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் இணையதளம் மற்றும் செய்திதாள்கள் வழியாக மக்களிடம் வேகமாக பரவுவது.இவை இரண்டும் மக்களிடம் பாலியல் விசயங்களை குறையாமல் பரப்புவதுதான்.

ஒரு தனிமனிதனின் செயல்கள் கூட அவர்கள் வாழ்வில் உச்சகட்ட மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு  ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் சிறந்த உதாரணம்.அவருக்கும் அன்னஹசாரேவுக்கும் இடையேயான சிறு கருத்து வேறுபாட்டையும்,ஊழலுக்கு எதிரான மக்களின் உறுதியான மனப்பாங்கையும் அவர் வழுவாக பயன் படித்திக்கொண்டார்.டெல்லி முதல்வர் ஆனார்.தன் வாழ்வின் உச்சகட்ட வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் சுப்பர் மார்க்கெட்டில் நூடுல்ஸ் வாங்க போயிருந்தேன்.ஆனால் எந்த கம்பெனி நூடுல்ஸ் வாங்கனு தெரியல.டக்னு மனசு டாப் ராமன்(top raman) னு மனசு சொல்லுச்சு. நான் ஏன் டாப் ராமன் வாங்குனேனு யோசிச்சா! டிவியில தினமும் அந்த கம்பெனி விளம்பரம் தான் ஓடிட்டு இருக்கு.அது என்  மனசுல எப்பவோ பதிஞ்சு போயிருந்தது. நான் எதை வாங்கனு குழப்பமா இருந்த போது எனக்குள்ள இருந்த டாப் ராமன்(top raman) விளம்பரம் அதோட வேலைய காட்டிருச்சி.ஒரு விளம்பரம் எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க.


வாழ்க்கையில் அல்லது தொழிலில் வெற்றி பெற நாம் பெரிய மாற்றங்கள் செய்ய தேவையில்லை.சிறு மாற்றங்களே போதும் என்பதை சொல்வது தான் இந்த டிப்பிங் பாய்ன்ட்(tipping point).