வீசும் காற்றிற்கு விருதுகள் ஏது ?
பொழியும் மழைக்கு பரிசுகள் ஏது ?
பசி தீர்க்கும் கைகளுக்கேது
தங்கக்காப்பு ?
சூரியனைப்போல்
பகலில் சுட்டெரிப்பான்
இரவில் எதிரொலிப்பான்
யாரையும் எதிர்னோக்காமல்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் தெரியாமல் தலைசாய்ப்பான்
விருதிற்காக வரிசை நின்ற ஆறெது?
பரிசிற்காக வீசிய காற்றெது?
நான் கேட்டா குயில் கூவியது?
நீ சொல்லிய மாலை புலர்ந்தது?
காலை மலர்ந்து
அழகை கொடுத்து
மாலை தலைகவிழ்ந்த
மலரின் மாண்பு
பரிசிற்கா ? இல்லை விருதிற்கா ?
பிறந்தான் வளர்ந்தான்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் பதிக்காமல் மறைந்தான்
அவன் தான் மனிதன் !
அவனே மக்கட் தலைவன் !
அவனே மண்ணில் பிறந்த மாணிக்கம் !
அவனை மரியாதை செய்வதே
நன் மக்கட் கழகு !
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
எனக்கு தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்புக்கும் மரியாதைக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.அது போல் பலரும் எனக்கு விருதுகள் வழங்கி அதை பலருக்கும் பகிரச்சொல்லி அழைப்பு விடுத்தனர்.முக்கியமாக தோழி திரு.ஸ்ரவாணி,திரு.ஹேமா ,திரு.Esther sabi இவர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.ஆனால் நான் வாங்கிய விருதை இதுவரை பகிரவில்லை.காரணம் நான் ஒரு நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருத்தேன்.
என்னைப் பொருத்தவரை நான் விருது கொடுக்கும் அளவுக்கு பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விடவில்லை.இருந்தாலும் ஒரு நல்ல ரசிகனாய் இருந்து நான் விரும்பிய எழுதிற்கு மதிப்பளிக்கும் உரிமை எனக்குண்டு என நம்புவதால் நான் தங்கப்பேனா விருதை சிலருக்கு வழங்க விரும்புகிறேன்.
இதை வாங்குபவர்கள் அனைவரும் மேலே என் கவிதையில் நான் குறிப்பிட்ட இயற்கையை ஒத்தவர்கள் .ஏனென்றால் இவர்கள் ஆறு போல் தங்கள் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.தங்களால் முடிந்ததை தங்கள் எழுத்தின் மூலமாக படைத்து கொண்டே இருக்கிறார்கள்.அவர்களை பாராட்டி ,விருது கொடுப்பதன் மூலம் நாம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
முதலாவதாக மதிப்பிற்குரிய ஐயா புலவர் சா இராமாநுசம்
அவர்களுக்கும்
இரண்டாவதாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும்
மூன்றாவதாக மதிப்பிற்குரிய Ramani ஐயா அவர்களுக்கும்
நான்காவதாக மதிப்பிற்குரிய கணேஷ் ஐயா அவர்களுக்கும்
ஐந்தாவதாக மதிப்பிற்குரிய மகேந்திரன் அவர்களுக்கும்
ஆறாவதாக மதிப்பிற்குரிய தோழி அவர்களுக்கும்
ஏழாவதாக மதிப்பிற்குரிய தோழி சசிகலா அவர்களுக்கும்
எட்டாவதாக மதிப்பிற்குரிய தோழி ஹேமா அவர்களுக்கும்
ஒன்பதாவதாக மதிப்பிற்குரிய தோழி கீதாமஞ்சரி அவர்களுக்கும்
பத்தாவதாக மதிப்பிற்குரிய Avargal Unmaigal அவர்களுக்கும்
தங்கப்பேனா விருது வழங்கி என் கவிதை சமர்ப்பணம் செய்கிறேன்.இவர்கள் அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.