Happy Digital Lovers Day
இலைகளை மேயும் ஆடுகளாய்
வலைதளங்களை மேயும் இளைஞர்கள்
கிளைகளில் பூத்த மலர்கள்
வலைதளங்களில் பூக்கின்றன
புல்தரையில் காத்திருந்தவர்கள்
கணிணி திரையில் காத்திருக்கிறார்கள்
காதலை சொல்ல பயந்தவர்கள்
கணிணி அரட்டையில் கதைக்கிறார்கள்
புறாக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு
குறுஞ்செய்திகள் தூது செல்கின்றன
கணப்பொழுதின் பிரிவை தாங்கமுடியாதவர்கள்
அலைபேசியின் மடியில் தவழ்கிறார்கள்
ஏக்கத்தில் புரண்டவர்கள்
தொடுதிரையில் தொட்டுக்கொள்கின்றனர்
சந்திக்காத இதயங்கள்
பேஸ்புக்கில் சந்தித்துவிட்டு
ட்வீட்டரில் நலம்விசாரித்து
அலைபேசியில் காதலை தொடர்கின்றன
கல்லெடுத்த காலத்திலும்
காதல் வந்தது
கணிணி காலத்திலும்
காதல் வருகிறது
காதல் மனிதனின் ஆன்மா
மனிதன் வாழும் வரை வாழும்!
வாழ்க காதல் !
வளர்க மின்னனு காதலர்தினம்!
மேலும் படிக்க