தோழி |
கோடையிலும் ஓர் வசந்தம்
பாலையிலும் ஓர் சோலைவனம்
பருவமடையா வயதில்
ரெட்டை ஜடையுடன்
கைகோர்த்து நடந்தது
ஒருகை இலந்தைப்பழத்தை
இருகைகள் பகிர்ந்துண்டது
டியூசன் வகுப்புகளுக்கு
துணையாய் வந்தது
யாரோ உன்னையடிக்க
எனக்கு கோபம்வந்தது
விடுமுறை நாட்களில் வந்த
இழந்தது போன்ற உணர்வு
அண்ணணை சாக்காய் வைத்து
உன்னைப் பார்த்தது
நட்பையும் தாண்டிய
நாகரீகப் பேச்சுகள்
இடையறாத பேச்சுக்களின்
நடுவே நீ காட்டும் மெளனம்
எல்லை தாண்டியபோதும்
நட்பாய் ஏற்றுக்கொண்டது
இவைகளை நினைத்தால்
இமைகளும் வலிக்கினறன
உடல்கள் நடுங்குகின்றன
கண்கள் குளமாகின்றன
ஆயிரம் வசந்தம்
ஆயிரம் கோடை
கடந்து விட்டேன்
நீயிட்ட கோலமட்டும்
மனதில் பசுமையாய்
நிழலாடுகிறது தோழி
உன் சுவடுகள் என் நெஞ்சில்
அதை ஒவ்வொருநாளும்
படிக்கிறேன் அழுகிறேன்