About Me

Wednesday, October 12, 2011

எதிர் உலகம்

நேசிக்கும் போது யோசிக்க முடியவில்லை,
யோசிக்கும் போது நேசிக்க முடியவில்லை,
நேசிப்பவர்களோ வாசலில்,
 யோசிப்பவனோ வீட்டிற்குள்,
அன்போ அனாதையாக ஊர்சுற்ற,
அகங்காரமோ எஜமானனாக,
யோசிப்புக்கும் நேசிப்புக்கும் இடையில்
வாழ்க்கை கரைந்து கொண்டிருக்கிறது.

அவள் வசம் நான்!!

அன்பே
உன்னை பார்த்த நாள் முதல் என் இதயம் ,
உன் சேலையில் ஒட்டுப்புல்லாய் ஒட்டிக்கொண்டது!
திருப்பி தருவாயா?
என் வசம் இருந்த நான் இப்போது உன்வசம்!
திருப்பி தருவாயா என்னை?
நீ சிரித்தது முதல் எனக்குள் போராட்டம்,
மேலும் என்ன செய்ய காத்திருக்கிறாய்?
நீ அடித்து விளையாட
என் இதயம் ஒன்றும் கோவில் மணியல்ல.
வலிக்கிறது இதயம்
அடிப்பது நீ என்பதால் இனிக்கிறது.
நீ வலியா இல்லை வாழ்க்கையா??

செறுக்கு

செறுக்குடன் சிரிக்கிறாள்
நிலா பெண்,
தன்னுடன் போட்டியிட்ட காதலிகள் எல்லாம்
கிழவிகள் ஆகுவதை கண்டு!

மயங்கொலிப் பிழை

அழகான மாலை நேரம்,
நீண்ட ஓடை,
அழகான மாலை நிலா,
அருமையான காற்று,
அழகான காதலன்,
காதலியோ தூங்கிக்கொண்டு இருக்கிறாள்,
வாழ்க்கையோ கரைந்து கொண்டு இருக்கிறது.

வெங்காய பாசம்

மனைவியின் அழுகையை நிறுத்த
ஆயிரம் சமாதானம் சொன்னான் கணவன்.
அவளோ விடாமல் அழுது கொண்டிருந்தால்.
கடைசியில் அவனும் அழ ஆரம்பித்தான், 
இதைப்பார்த்து அம்மா சொன்னாள்
வெங்காயம் நறுக்கியது போதுமென்று!