
அது என்னய்யா function? கணக்கு வாத்தியார் போர்டுல எழுதுவாரே ஒரு வார்த்தை யாருக்கும் தெரியாது ஆனா ஒரு பத்து பன்னிரென்டுவேர் மட்டும் வேகமா தலையாடுவாங்க?வாத்தியார் கிட்டகேட்டா இன்னும் புரியாத பாசைல சொல்லி நம்ல கொன்னுடுவாரு.சரி விசயத்துகு வருவோம்.நான் எப்படி படிப்பேனோ அப்படியே சொல்லிதர முயற்சி செய்றேன் .முதல் என்ன செய்யனும்னா functionக்கு அர்த்தம் பார்க்கனும்.functionக்கு தமிழ் அர்த்தம் நிகழ்வு.அப்படினா ஏதாவது ஒன்று குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட பொருளின் மேல் ஏதாவது நடந்தா அது ஒரு நிகழ்வு.அட சும்மா சொன்னா ஏதாவது நடக்கனும்பா!! (marriage function,birthday function etc)

இப்போ மேல படத்த பாருங்க அந்த பெரிய f இருக்கே அது மாரிதான் function ன குறிப்பிடனுமாம்.இத function of x னு சொல்லனும்.அப்படினா எதாவது x ல நடக்கனும்னு அர்த்தம்.ஏதாவதுனா என்ன அர்த்தம்னா x ஓட ஒன்ன கூட்டலாம்(x+1) .அதனால x ன் மேல் கூட்டல் நிகழ்வு நடக்கிறது.
y = f(x) னா என்ன அர்த்தம்.ரொம்ப ஈசி தான்.y மதிப்பு x ன் மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு சமம்.
கவனிக்க y = x னா y மதிப்பு x மதிப்புக்கு சமம்.
y = f(x) னா y மதிப்பு x ன் மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு சமம்.
அட சும்மா x ஏதாவது பன்னுங்கபா கூட்டுங்க,கழிங்க,பெருக்குங்க இல்ல விளக்கமாறால அடிச்சு அதன் மதிப்பு மாறுனா அதுவும் function தான் பா!!
உதாரணம்
f(x) = (x+1)(x*X)
f(x) = (x+1)/(x*X)
f(x) = (x)/m