About Me

Tuesday, November 23, 2010

எதார்த்தம்

எறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா
நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன்.

அருமையான் வரிகள் ஆழ்ந்த ஞானமும் கூட.ஆனால் இவை எதார்த்தமான வரிகளா?
எதார்த்தம் என்றால் என்ன?இயல்பு நிலையை அல்லது இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலையை நாம் எதார்த்தம் என்று மொழி வழியில் பொருள் கொள்கிறோம்.இங்கே "எறும்பு" ஒரு இயல்பு நிலை அல்லது இயற்கை நிலை,"தோல்" இயல்பு நிலை,"உரித்தல்" இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலை ஆக ஒவ்வொரு வார்த்தையையும் பிரித்துப் பார்த்தால் "இயல்பு நிலையை அல்லது இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலையை" குறிக்கிறது.
ஆனால் சேர்த்துப் பார்த்தால் எறும்பை பார்ப்பதே கஷ்டம் அதன் தோலை உரித்தல் என்றால்?இதில் யானை வேறு?அடுத்து இதயத்தோலை உரிப்பது. முடியல இப்பவே கண்ண கட்டுதே!! முடிவாக ஞானம் என்பது எதார்த்தில் இல்லை என்பது தான் கண்ணாதாசன் சொல்ல வரும் கருத்தா?

தாகூர் மரணப் படுக்கையில் இருக்கும் போது யாரோ ஒருவர் கேட்டாராம் "இந்த உலகிலே சிறந்த கவி நீங்கள் தான் ஏன் என்றால் நீங்கள் தான் 6000 கவிதைகள் எழுதி உள்ளீர்கள்.யாரும் இவ்வளவு கவிதைகள் எழுதியது இல்லை.நீங்கள் சொல்ல வந்தெல்லாம் சொல்லிவிட்டீர்கள் தானே?"அவர் அழுது விட்டார்.யாருக்கு தெரியும் எல்லா கவிகளும் தான் சொல்ல வருவதை ஒரு பாடலில் சொல்ல முடிவதில்லை.அவர் சொல்ல வந்ததை
சொல்லவில்லை என்பது தான் அர்த்தம்.

நுண்ணுலக எதார்த்தில்(quantum reality) ஒரு துளையில் இருந்து வரும் ஒளியில் ஒரு எலெக்ட்ரான் எல்லா இடத்திலும் உள்ளது.நம்மால் சரியான இடத்தை சொல்ல முடியது.
இதை முதல் முறை கேட்ட ஐன்ஸ்டைன் இதெல்லாம் மடத்தனம் என்றார்.ஒரு கட்டத்தில்
நண்பரிடம் நான் என் கண்கள் வழியே நிலவை பார்க்கிறேன் இது எதார்த்தமா அல்லது கனவா? என்றார்.

யானி இந்த நூற்றாண்டின் மாபெரும் இசை ஞானி அவருடய "tribute" இசைக்கோவை
சர சர வென ஓடும் மின்னல் குதிரை.ஆனால் பிரித்துப் பார்த்தால் ஒரு சாதாரண இசைக்கோவை.இதை அவர் எழுதியதின் பின் காரணம் அவர் நாட்டில் பூகம்பம் அதன் முழு அனுபவத்தைதான் அவர் இசைக்கோவையாக மாற்ற நினைத்தார்.

இங்கு எல்லோரும் தாங்கள் கண்ட ஓர் அனுபவத்தை தங்கள் திறமையின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.அது தான் இங்கு பிரச்சனை.சாதாரணமான நம் வாழ்வில் காதல்,காதல் தோல்வி,அன்பு,கருனை என நுழையும் போது மிக பெரும் அனுபத்தை சந்திக்க நேரிடுகிறது.சாதாரணமாக நாம் எல்ல அனுபவங்களையும் எழுத்தின்
மூலமாகவும்,பேச்சின் மூலமாகவும் பெறுகிறோம்.ஆனால் அனுபவம் என்பது அனுபவிக்க பட
வேண்டியது.காதல் தோல்வி என்பது அனுபவம் அப்போது நாம் நமக்கு தெரிந்த வழியில்
எழுதவோ அல்லது பேசவோ ஆரம்பித்து விடுகிறோம்.ஆனால் நம்மால் முடிவதில்லை.

தாகூர் மொழிப் புலமை மிக்கவர்,யானி இசை புலமை மிக்கவர்,ஐன்ஸ்டைன் அறிவியல் புலமைமிக்கவர்.எல்லோரும் அனுபத்தை தங்களுக்கு தெரிந்த வழியில் வெளிப்படுத்த முயன்றிரிக்கிறார்கள்.அது எதார்த்ததில் இல்லை.

சிகரம் வைத்தார் போல் பாரதியின் பாடல் வரிகள்
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு- தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'"

முழுமையான அனுபவ பாடல் வரிகள்.அனுபவம் மட்டுமே எதார்த்தம்.அது மட்டுமே எதார்த்தம்.நாம் நம் மொழியின் வாயிலாக இயற்கையை ரசிக்கலாம் ஆனால் கட்டுப்படுத்த முடியாது.

"தனிமையில் காணம்
சபையினில் மொளனம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்.
"

ஏஸ் தம்மோ ஸ்னந்தனோ